ஊழியர்களை தக்கவைத்துக் கொள்வதற்கும், அவர்களின் நலனை நிறுவனத்தின் வளர்ச்சியுடன் இணைப்பதற்கும் Wipro நிறுவனம் ESOP-களை (Employee Stock Options) ஒரு முக்கிய கருவியாகப் பயன்படுத்துகிறது.
அந்த வகையில், ஏப்ரல் 7, 2026 அன்று, நிறுவனத்தின் ADS Restricted Stock Unit Plan 2004 மற்றும் Restricted Stock Unit Plan 2007 திட்டங்களின் கீழ், ஊழியர்கள் தாங்கள் வாங்கிய Stock Options-ஐ பயன்படுத்தியதால், 1,02,526 equity shares ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஒதுக்கீட்டிற்குப் பிறகு, Wipro-வின் மொத்த outstanding share capital தோராயமாக 10.48 பில்லியன் ஷேர்களாக உயர்ந்துள்ளது.
இந்திய IT துறையில், ஊழியர்களைக் கவர்வதற்கும், தக்கவைப்பதற்கும் ESOP-கள் ஒரு வழக்கமான முறையாகப் பார்க்கப்படுகிறது. Wipro மற்றும் Tech Mahindra போன்ற நிறுவனங்கள் இந்த முறையை அதிகமாகப் பயன்படுத்த, Infosys மற்றும் HCL Technologies போன்ற நிறுவனங்கள் சற்று கவனமாக செயல்படுகின்றன.
இந்த பங்கு ஒதுக்கீடு ஒரு வழக்கமான செயல்முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
