SEBI விதிமுறைகளின்படி, நீண்ட காலமாக க்ளைம் செய்யப்படாத சொத்துக்களை Investor Education and Protection Fund (IEPF)-க்கு மாற்ற வேண்டியது கட்டாயம். Tata Elxsi நிறுவனம், குறிப்பாக 2018-19 நிதியாண்டில் அறிவிக்கப்பட்டு, ஆனால் பங்குதாரர்களால் க்ளைம் செய்யப்படாத டிவிடெண்ட் தொகைகளையும், மேலும் 7 ஆண்டுகளாக டிவிடெண்ட் தொகை வராமல் உள்ள பங்குகளையும் IEPF-க்கு அனுப்பும் பணியைத் தொடங்கியுள்ளது.
இது பங்குதாரர்களுக்கு அனுப்பப்படும் இறுதி அறிவிப்பு. ஆகஸ்ட் 16, 2026-க்கு பிறகு, இந்த பணம் மற்றும் பங்குகளை க்ளைம் செய்ய பங்குதாரர்களுக்கு உரிமை இருக்காது. அதன் பிறகு, இந்த சொத்துக்கள் அரசு நிதியத்தின் கீழ் வந்துவிடும்.
இதுபோன்ற க்ளைம் செய்யப்படாத டிவிடெண்ட் மற்றும் பங்குகளை IEPF-க்கு மாற்றுவது Infosys, TCS, Wipro போன்ற பெரிய IT நிறுவனங்களிலும் பின்பற்றப்படும் ஒரு வழக்கமான நடைமுறைதான். பங்குதாரர்கள் தங்களது உரிய தொகையை க்ளைம் செய்ய, குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள், நிறுவனத்தின் Registrar and Transfer Agent (RTA)-க்கு தேவையான ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். காலதாமதம் செய்தால், க்ளைம் செய்யும் உரிமையை இழக்க நேரிடும்.
