AI திறமையை வளர்க்கும் நோக்கம்
University of Cincinnati மற்றும் Salesforce உடன் இணைந்து, Tata Consultancy Services (TCS) நிறுவனம் அமெரிக்காவில் 'My First AI Job' என்ற புதிய ப்ரோக்ராமினை தொடங்கியுள்ளது. இந்த முயற்சி, மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் தேவையான திறன்களை வளர்க்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
3 மாத கால பாடத்திட்டம், நிஜ உலக ப்ராஜெக்ட்கள், பயிற்சி மற்றும் சான்றிதழ் என பல அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. இந்த ப்ரோக்ராமை வெற்றிகரமாக முடிக்கும் பங்கேற்பாளர்களுக்கு, TCS-ல் ஒரு நிரந்தர வேலைக்கான வாய்ப்பும் கிடைக்கும். இதன் மூலம், TCS தனது அமெரிக்க AI திறமை தளத்தை (talent pipeline) வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது.
TCS, மார்ச் 31, 2026 அன்று முடிவடைந்த நிதியாண்டில் $30 பில்லியனுக்கும் அதிகமான consolidated revenue-ஐ பதிவு செய்துள்ளது. இந்நிறுவனம் தற்போது உலகம் முழுவதும் 5,84,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ளது.
TCS, பல்கலைக்கழக கூட்டாண்மை மற்றும் விரிவான பயிற்சி மூலம் திறமைகளை மேம்படுத்துவதில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. இதுமட்டுமின்றி, NVIDIA மற்றும் OpenAI போன்ற நிறுவனங்களுடனும் AI முயற்சிகளில் இணைந்து செயல்பட்டு வருகிறது.
TCS-ஐப் போலவே, Infosys, Wipro, Accenture போன்ற பிற முன்னணி நிறுவனங்களும் அமெரிக்காவில் AI திறமைகளை வளர்க்க பல்வேறு ஆரம்ப கால திட்டங்கள், பயிற்சி வகுப்புகள் மற்றும் apprenticeship-களில் முதலீடு செய்து வருகின்றன. இது AI-க்கு தயாரான பணிப்படையை உருவாக்குவதில் ஒரு பரந்த தொழில்துறை கவனம் காட்டுவதை உணர்த்துகிறது.