பங்குதாரர்களுக்கு முக்கிய தேதி ஏன்?
இந்த Record Date என்பது, ஜூலை 17, 2026 அன்று யாருக்கெல்லாம் பங்கு உள்ளதோ, அவர்கள் வரவிருக்கும் டிவிடெண்ட் பெறுவதற்கும், நிறுவனத்தின் 34வது ஆண்டு பொதுக்கூட்டமான AGM-ல் (Annual General Meeting) பங்கேற்பதற்கும் தகுதியானவர்கள் என்பதை உறுதிசெய்யும் முக்கிய அறிவிப்பாகும்.
நிறுவனத்தின் 34வது AGM, ஜூலை 24, 2026 அன்று நடைபெற உள்ளது. இந்த இரண்டு முக்கிய நிகழ்வுகளுக்கும், பங்குதாரர்களின் பட்டியலை தெளிவாக இறுதி செய்ய இந்த Record Date உதவுகிறது.
இந்த தேதியின் அடிப்படையில், அன்றைய தினம் பங்கு வைத்திருக்கும் முதலீட்டாளர்கள், டிவிடெண்ட் அறிவிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டால், அதனைப் பெறவும், AGM-ல் வாக்களிக்கவும், விவாதங்களில் பங்கேற்கவும் தகுதி பெறுவார்கள். AGM-ல் ஒப்புதல் கிடைத்த பிறகு, டிவிடெண்ட் வழங்கும் தேதி குறித்த கூடுதல் விவரங்களை நிறுவனம் வெளியிடும்.
