வருவாய் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்ன?
IndiaMART InterMESH நிறுவனம், மார்ச் 31, 2026 அன்றுடன் முடிவடைந்த நான்காம் காலாண்டு மற்றும் முழு ஆண்டுக்கான நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த காலாண்டில் மட்டும் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் (Consolidated Revenue) 14% அதிகரித்து ₹404 கோடியாக உள்ளது. முழு ஆண்டின் வருவாய் ₹1,569 கோடியை எட்டியுள்ளது.
வருவாய் உயர்வுக்கு முக்கிய காரணம், நிறுவனத்தின்deferred revenue (வருவாய் ஒதுக்கீடு) 17% உயர்ந்து ₹1,965 கோடியாக அதிகரித்திருப்பதே ஆகும். இது எதிர்கால வருவாய் குறித்த நம்பிக்கையை அளிக்கிறது.
சப்ளையர்கள் குறைவால் என்ன தாக்கம்?
வருவாய் அதிகரித்தாலும், இந்த காலாண்டில் மட்டும் நிகரமாக 1,200 பெய்டு சப்ளையர்களை (Paying Suppliers) இழந்துள்ளது. இதனால் மொத்த சப்ளையர்களின் எண்ணிக்கை 2,20,000 ஆக குறைந்துள்ளது. குறிப்பாக 'Silver' டைப் சப்ளையர்கள் மத்தியில் இந்த சரிவு அதிகமாக இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. வாடிக்கையாளர் சரிபார்ப்பை (Buyer Verification) கடுமையாக்கியதன் காரணமாக, மார்க்கெட்டிங் மாற்று விகிதங்கள் (Conversion Rates) சற்று குறைந்திருப்பது இதற்குக் காரணமாக கூறப்படுகிறது. இதனால், உடனடி லீட் எண்ணிக்கையை விட, நீண்ட காலத்திற்கான பிளாட்ஃபார்ம் நம்பகத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் பிற முக்கிய அம்சங்கள்
- நிறுவனத்தின் துணை நிறுவனமான Busy Infotech, FY26-க்கு வலுவான பில்லிங் மற்றும் உரிம விற்பனையை பதிவு செய்துள்ளது.
- இந்த காலாண்டிற்கான ஒரு பங்குக்கு ₹60 ஈவுத்தொகை (Dividend) வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவின் B2B சந்தையில் IndiaMART சுமார் 60% சந்தைப் பங்களிப்புடன் ஆதிக்கம் செலுத்துகிறது.
- நிறுவனத்திடம் ₹3,280 கோடி ரொக்க கையிருப்பு உள்ளது.
கவனிக்க வேண்டிய ரிஸ்க்குகள்
- 'Silver' டைப் சப்ளையர்களிடையே மாதாந்திர சரிவு 4-7% ஆக உயர்ந்துள்ளது.
- விலை உயர்வு மற்றும் பொருளாதார நிலைமைகள் காரணமாக Q4-ல் 1,200 பெய்டு சப்ளையர்கள் வெளியேறியுள்ளனர்.
- கடுமையான வாடிக்கையாளர் சரிபார்ப்பு காரணமாக, ட்ராஃபிக்-லிருந்து விசாரணைக்கு மாறும் விகிதத்தில் 1% சரிவு ஏற்பட்டுள்ளது.
- TRAI விதிமுறைகள் தொடர்பான சட்டப் பிரச்சனைகள் நிறுவனத்தின் செயல்பாடுகளை பாதிக்கலாம்.
