Quest Flow Controls, தனது உற்பத்தித் திறனை அமோகமாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே இருந்த 3,000 வால்வுகளிலிருந்து ஆண்டுக்கு 30,000 வால்வுகள் வரை உற்பத்தி செய்யும் அளவுக்கு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
இதன் விளைவாக, 2025-26 நிதியாண்டிற்கான ஆர்டர் புக் ₹110 கோடி-ஐ தாண்டி சாதனை படைத்துள்ளது. நிறுவனத்தின் உற்பத்தி ஆலையின் பரப்பளவு 7,500 சதுர அடியிலிருந்து 35,000 சதுர அடியாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. ஊழியர்களின் எண்ணிக்கையும் 16 லிருந்து 100-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
சோதனை மற்றும் பொருள் கையாளும் உள்கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. தற்பொழுது, உற்பத்தியை அதிகரிக்க, மூன்று ஷிப்டுகளில் 24 மணி நேரமும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த அதிரடி விரிவாக்கம், ஆயில் & கேஸ் (Oil & Gas), மரைன் (Marine), மற்றும் டிஃபென்ஸ் (Defence) போன்ற இந்தியாவின் முக்கிய துறைகளில் அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய உதவும். இதனால் Quest Flow Controls சந்தையில் தனது பங்கை அதிகரிக்க தயாராகி உள்ளது.
உலகளாவிய இண்டஸ்ட்ரியல் வால்வுகள் சந்தை $80-95 பில்லியன் ஆக உள்ளது, இது $110-120 பில்லியன் வரை வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. KSB லிமிடெட் மற்றும் லார்சன் & டூப்ரோ போன்ற நிறுவனங்களுடன் போட்டியிடும் Quest Flow Controls, பாதுகாப்பு மற்றும் சிறப்பு வாய்ந்த துறைகளில் கவனம் செலுத்துகிறது.
