பங்குதாரர்களுக்கு போனஸ்!
மோல்ட்-டெக் பேக்கேஜிங் (Mold-Tek Packaging Ltd) நிறுவனத்தின் வாரியக் குழு, 2025-26 நிதியாண்டிற்கான முதல் இடைக்கால டிவிடெண்டாக ஒரு பங்குக்கு ₹2 வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இது அதன் ₹5 முக மதிப்பில் 40% ஆகும். பங்குதாரர்களுக்கு இந்த டிவிடெண்ட் சென்று சேர்வதற்கான ரெக்கார்ட் தேதி ஏப்ரல் 24, 2026 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏன் இந்த அறிவிப்பு முக்கியம்?
நிறுவனத்தின் நிதிநிலை மற்றும் லாபம் ஈட்டும் திறன் மீது நிர்வாகத்திற்கு இருக்கும் நம்பிக்கையை இந்த டிவிடெண்ட் அறிவிப்பு காட்டுகிறது. பங்குதாரர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கம்பெனி பின்னணி
1986-ல் தொடங்கப்பட்ட மோல்ட்-டெக் பேக்கேஜிங், இந்தியாவில் ரிஜிட் பிளாஸ்டிக் பேக்கேஜிங் துறையில் முன்னணி வகிக்கிறது. பெயிண்ட், லூப்ரிகண்ட்ஸ், FMCG மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற பல்வேறு துறைகளுக்கு இந்நிறுவனம் பேக்கேஜிங் தீர்வுகளை வழங்கி வருகிறது. கடந்த பத்தாண்டுகளில், பங்குதாரர்களுக்கு தொடர்ந்து டிவிடெண்ட் வழங்கி வந்துள்ளதுடன், டிவிடெண்ட் தொகையும் சீராக உயர்ந்து வந்துள்ளது. சராசரியாக, இதன் டிவிடெண்ட் யீல்டு 0.71% முதல் 0.78% வரை இருக்கும். கடந்த பன்னிரண்டு மாதங்களில், கம்பெனி ஒரு பங்குக்கு மொத்தம் ₹4.00 டிவிடெண்டாக வழங்கியுள்ளது.
