லாபத்திற்கு வழிவகுத்த காரணங்கள் என்ன?
Senores Pharmaceuticals-ன் நிதி நிலை அறிக்கைப்படி, 2026 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் (Q4 FY26) மட்டும், கம்பெனியின் வரிக்குப் பிந்தைய லாபம் (PAT) கடந்த ஆண்டை விட 105% அதிகரித்து ₹37 கோடி ஆக உயர்ந்துள்ளது. இதே காலாண்டில், கம்பெனியின் மொத்த வருவாய் (Total Income) ₹190 கோடி எட்டியுள்ளது.
முழு நிதியாண்டு 2026-லும் (FY26) செம்ம வளர்ச்சி தெரிகிறது. வரிக்குப் பிந்தைய லாபம் (PAT) 108% உயர்ந்து ₹122 கோடியாகவும், மொத்த வருவாய் 62% அதிகரித்து ₹664 கோடியாகவும் பதிவாகியுள்ளது.
அமெரிக்க சந்தை விரிவாக்கம் ஒரு கேம் சேஞ்சரா?
இந்த அபார வளர்ச்சிக்கு முக்கியக் காரணம், Senores Pharma-வின் அமெரிக்க சந்தை விரிவாக்க வியூகங்கள் தான். குறிப்பாக, சமீபத்திய ஆக்ட்விஷன் (Acquisition) மற்றும் புதிய ஜாயிண்ட் வென்ச்சர் (Joint Venture) மூலம் அமெரிக்காவில் தங்கள் தடத்தைப் பதித்துள்ளனர். இதன் மூலம் உலக அளவில் தங்கள் சந்தை எல்லையையும், தயாரிப்பு வரிசையையும் (Product Range) விரிவாக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த வியூகங்கள், பங்குதாரர்களுக்கு (Shareholders) லாபத்தையும், கம்பெனியின் மதிப்பையும் (Valuation) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க சந்தையில் கிடைத்திருக்கும் இந்த அணுகல், செலவுகளைக் குறைக்கவும், சந்தைப் போட்டியைச் சமாளிக்கவும் உதவும்.
எதிர்கால திட்டங்கள் என்ன?
அடுத்ததாக, Apnar Pharmaceuticals ஆக்ட்விஷனின் இரண்டாம் கட்டத்தை (Phase 2) 2027 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் (Q2 FY27) முடிக்க Senores Pharma திட்டமிட்டுள்ளது. இந்த ஆக்ட்விஷன் முடிந்த 12-18 மாதங்களுக்குள் Apnar ஆலையிலிருந்து வருவாய் அதிகரிக்கத் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், புதிதாக அமைக்கப்பட்ட அமெரிக்க ஜாயிண்ட் வென்ச்சர் ஆன Amerisyn-ன் செயல்பாடுகளும், குறிப்பாக அமெரிக்க மத்திய சந்தைக்கான (U.S. federal market) சப்ளை சேனல்கள் எப்படி செயல்படுகின்றன என்பதும் முதலீட்டாளர்களின் பார்வையில் இருக்கும்.
