கம்பெனியின் வளர்ச்சிக்கு என்ன காரணம்?
Q3 FY'26-க்கான நிதிநிலை முடிவுகளில் KMC Speciality Hospitals (Kauvery Hospital) அசத்தியுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ₹7.5 கோடி லாபம் ஈட்டிய நிலையில், இந்த முறை ₹13.7 கோடி என 83% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
மொத்த வருவாய் (Total Income) 33% உயர்ந்து ₹83.2 கோடி ஆக உள்ளது. இது முந்தைய ஆண்டு ₹62.6 கோடி ஆக இருந்தது. மேலும், EBITDA 50% அதிகரித்து ₹25.9 கோடி ஆக பதிவாகியுள்ளது. இதன் மூலம் EBITDA மார்ஜின் 31.1% ஆக அதிகரித்துள்ளது. PAT மார்ஜின் 16.5% ஆக உள்ளது.
செயல்பாடுகளும் சிறப்பாக உள்ளது!
கம்பெனியின் முக்கிய செயல்பாடுகளும் சிறப்பாக உள்ளன. ஆக்ஸிபைடு பெட் நாட்கள் (Occupied Bed Days) 11% உயர்ந்துள்ளன. இன்-பேஷன்ட் வால்யூம் (In-Patient Volumes) 18% மற்றும் அவுட்-பேஷன்ட் வால்யூம் (Out-Patient Volumes) 32% என கணிசமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, தாய் மற்றும் சேய் நல சேவைகள் (Mother and Child Care) கம்பெனியின் மொத்த வருவாயில் 27% பங்களிப்பை தொடர்ந்து அளித்து வருகின்றன.
விரிவாக்க திட்டங்களும் கைகொடுக்கின்றன!
தென்னிந்தியாவில் வேகமாக விரிவடையும் Kauvery Hospital, அடுத்த 2 ஆண்டுகளில் சுமார் 1,000 பெட்களை சேர்க்க திட்டமிட்டுள்ளது. இதற்காக ₹580 கோடி முதலீடும் செய்யப்பட உள்ளது. KMC Speciality Hospitals (India) Ltd. இதன் முக்கிய துணை நிறுவனமாக செயல்படுகிறது.
Apollo Hospitals, Max Healthcare போன்ற பெரிய கம்பெனிகளுடன் ஒப்பிடும்போது, KMC Speciality Hospitals-ன் இந்த வளர்ச்சி சதவிகிதம் (Percentage Growth) மிகவும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும், பணவீக்கம் (Inflation) போன்ற காரணங்களால் செயல்பாட்டு செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
