நாடு முழுவதும் மின் தேவையை பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் Tata Power-ன் 4150 MW திறன் கொண்ட முந்த்ரா மின் உற்பத்தி நிலையம், ஏப்ரல் 1, 2026 முதல் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. சில காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த முக்கிய மின் உற்பத்தி ஆதாரம் மீண்டும் இயங்கத் தொடங்கியிருப்பது பெரும் ஆறுதல்.
இந்த முந்த்ரா மின் நிலையம், இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை நம்பி இயங்கும் ஒரு பெரிய திட்டமாகும். ஆனால், இந்தோனேசிய அரசின் விதிமுறைகள் மாற்றம் மற்றும் நிலக்கரி விலை ஏற்றம் காரணமாக, ₹3,800 கோடிக்கு மேல் Tata Power-ன் நிகர சொத்து மதிப்பு (Net Worth) சரிந்தது. மேலும், மின் விநியோக நிறுவனங்களுடனான (DISCOMs) கட்டணப் பிரச்சனைகளும் இதற்குக் காரணம்.
முன்னதாக, ஜூலை 1, 2025 முதல், எரிபொருள் செலவுகளை ஈடுகட்டும் அரசின் சிறப்பு விதிமுறை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, இந்த ஆலை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த நீண்ட கால இடைவெளியில், அதாவது FY26-ன் முதல் 9 மாதங்களில், சுமார் ₹800 கோடி இழப்பை இந்த ஆலை சந்தித்தது.
இந்நிலையில், குஜராத் அரசு மின் கொள்முதல் ஒப்பந்தத்தில் (PPA) கூடுதல் இறக்குமதி எரிபொருள் செலவுகளை அனுமதித்து ஒப்புதல் அளித்தது. இதைத் தொடர்ந்து, மின்சக்தி அமைச்சகம் (Power Ministry) கோடைக்கால மின் தேவையை பூர்த்தி செய்ய இந்த ஆலையை உடனடியாக இயக்க அரசுக்கு உத்தரவிட்டதன் பேரில், இந்த ஆலை மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்த மறுதொடக்கத்தின் மூலம், Tata Power-ன் மொத்த மின் உற்பத்தித் திறன் கணிசமாக உயர்ந்துள்ளது. குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களுக்கு மின் விநியோகம் சீரடையும். சந்தையில் மின் பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்கவும் இது உதவும்.
