'சகசம் நிவேஷக்' முகாம் - என்னென்ன முக்கியத்துவம்?
பேங்க் ஆஃப் பரோடா, ஷேர் ஹோல்டர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, 'சகசம் நிவேஷக்' என்ற சிறப்பு 100 நாள் பிரச்சாரத்தை அறிவித்துள்ளது. இது ஏப்ரல் 1, 2026 அன்று தொடங்கி, ஜூலை 9, 2026 வரை செயல்படும். பங்குதாரர்கள் தங்களுடைய KYC (Know Your Customer) தகவல்களை உடனுக்குடன் புதுப்பித்துக்கொள்ளவும், ஏற்கனவே வர வேண்டிய ஆனால் வாங்காத டிவிடெண்ட் தொகையை பெற்றுக் கொள்ளவும் இந்த முகாம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
KYC அப்டேட் செய்வது ஏன் அவசியம்?
தங்களுடைய KYC விவரங்களை அப்டேட் செய்யாத ஷேர் ஹோல்டர்கள், வரவிருக்கும் டிவிடெண்ட் தொகையை பெற முடியாது. மேலும், வங்கி நிர்வாகம், சட்டப்படி, குறிப்பிட்ட காலத்திற்குள் unclaimed ஆக இருக்கும் தொகைகளை இன்வெஸ்டர் எஜுகேஷன் அண்ட் புரொடெக்ஷன் ஃபண்ட் (IEPF) கணக்கிற்கு மாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்த மாற்றத்தைத் தவிர்க்க, ஷேர் ஹோல்டர்கள் இந்த முகாம் காலத்திற்குள் தங்கள் விவரங்களை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
IEPF விதிமுறைகளும் புதிய சட்ட மாற்றங்களும்
கடந்த ஏழு வருடங்களாக unclaimed ஆக இருக்கும் சொத்துக்கள், IEPF-க்கு மாற்றப்படும். ஆனால், சமீபத்தில் கொண்டுவரப்பட்ட வங்கிச் சட்டத் திருத்தங்களின்படி, பேங்க் ஆஃப் பரோடா போன்ற அரசுக்கு சொந்தமான வங்கிகள் (PSBs), ஆகஸ்ட் 1, 2025 முதல் unclaimed சொத்துக்களை IEPF-க்கு மாற்றத் தொடங்கியுள்ளன. இந்த புதிய விதிமுறைக்கு ஏற்ப, ஷேர் ஹோல்டர்களை எச்சரித்து, அவர்கள் பணத்தைப் பெற்றுக்கொள்ள இந்த முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
செயல்படாமல் போனால் என்ன ஆகும்?
ஷேர் ஹோல்டர்கள், இந்த 'சகசம் நிவேஷக்' முகாம் காலத்திற்குள் KYC-யை அப்டேட் செய்யாமலோ அல்லது டிவிடெண்ட் தொகையை claim செய்யாமலோ போனால், அந்தப் பணம் IEPF-க்கு மாற்றப்பட்டுவிடும். பின்னர், அந்தப் பணத்தை IEPF-ல் இருந்து திரும்பப் பெறுவது என்பது சற்று சிக்கலான செயல்முறையாகும்.
மற்ற வங்கிகளின் நிலை
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) மற்றும் பஞ்சாப் நேஷனல் பேங்க் (PNB) போன்ற பிற பொதுத்துறை வங்கிகளும், இந்த IEPF விதிமுறைகள் காரணமாக, தங்கள் ஷேர் ஹோல்டர்களுடன் தொடர்பை மேம்படுத்த இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.
