GAEL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, FY26-ல் மட்டும் கம்பெனியின் வருவாய் முந்தைய ஆண்டான FY25-ல் இருந்த ₹4,612.58 கோடியிலிருந்து 24% அதிகரித்து ₹5,728.60 கோடியாக உயர்ந்துள்ளது. நெட் ப்ராஃபிட்டும் ₹249.25 கோடியிலிருந்து கணிசமாக உயர்ந்து ₹304.28 கோடியை எட்டியுள்ளது.
இந்த சிறப்பான செயல்பாட்டின் காரணமாக, பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு, ஒரு பங்குக்கு ₹0.30 இறுதி டிவிடெண்ட் (Final Dividend) வழங்கவும் இயக்குநர் குழு பரிந்துரைத்துள்ளது.
Agro-processing துறையில் செயல்படும் GAEL, சோயா, மக்காச்சோளம் போன்றவற்றை பதப்படுத்தி, சமையல் எண்ணெய் போன்றவற்றை உற்பத்தி செய்கிறது. வாடிக்கையாளர் தேவையை பூர்த்தி செய்ய, குறிப்பாக மக்காச்சோள பதப்படுத்தும் திறனை இந்நிறுவனம் விரிவுபடுத்தியுள்ளது. இந்தப் பொருளாதார வளர்ச்சி, சந்தை நிலவரங்கள் மற்றும் திறமையான செயல்பாடுகள் மூலம் சாத்தியமாகியுள்ளது.
மேலும், 'புதிய தொழிலாளர் சட்டங்களுக்கான' (New Labour Codes) மத்திய மற்றும் மாநில விதிகள் இறுதி செய்யப்படுவதை GAEL நிறுவனம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இதன் சாத்தியமான நிதி தாக்கங்களை மதிப்பிட்டு, அதற்கு ஏற்ப நடவடிக்கைகளை எடுக்க இந்நிறுவனம் தயாராகி வருகிறது.
FY26-27 நிதியாண்டுக்கான தணிக்கையாளர்களாக (Auditors) M/s. T. R. Chadha & Co. LLP மற்றும் M/s. N. D. Birla & Co. ஆகியோர் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
