Russia மற்றும் Ukraine நாடுகளுக்கு இடையே போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை மற்றும் உலகளாவிய சப்ளை செயினில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் முதலீட்டாளர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடந்த வார இறுதியில், Russia மற்றும் Ukraine இடையே தாக்குதல்கள் மீண்டும் அதிகரித்துள்ளன. Kyiv மற்றும் Sumy உள்ளிட்ட பகுதிகளில் டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதே நேரத்தில், நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் (UN) பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்துள்ளன.
இந்திய சந்தையில் என்ன தாக்கம்?
இந்த போர் இந்திய முதலீட்டாளர்களுக்கு சவாலாக மாறலாம். குறிப்பாக, கச்சா எண்ணெய் விநியோகத்தில் Russia ஒரு முக்கிய பங்கு வகிப்பதால், மோதல் நீடிக்கும் போது கச்சா எண்ணெய் விலையில் அதிக ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம். கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால், இந்தியா போன்ற இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு அது சுமையாகும்.
இதன் தாக்கம் எந்தெந்த துறைகளில் இருக்கும்?
- Aviation: எரிபொருள் செலவு அதிகரிப்பால் விமான நிறுவனங்களின் லாபம் பாதிக்கப்படலாம்.
- Paints & Chemicals: கச்சா எண்ணெய் சார்ந்த கச்சா பொருட்கள் (oil derivatives) பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு செலவு அதிகரிக்கும்.
- Food Sector: இந்த பிராந்தியத்தில் இருந்து கோதுமை மற்றும் சன்பிளவர் ஆயில் ஏற்றுமதி பாதிக்கப்படுவதால், உணவு விலைவாசி உயரும் அபாயம் உள்ளது.
தற்போதைய சூழலில், முதலீட்டாளர்கள் கச்சா எண்ணெய் விலை போக்கு மற்றும் சர்வதேச சந்தையின் மாற்றங்களை உன்னிப்பாக கவனிப்பது அவசியம். ஐரோப்பிய சந்தைகளில் அதிக தொடர்புள்ள இந்திய நிறுவனங்களின் செயல்பாடுகளையும், மேலாண்மை கருத்துக்களையும் கண்காணிப்பது உங்கள் முதலீட்டுக்கு பாதுகாப்பாக அமையும்.
