அமெரிக்க sanctions-ஐ தவிர்க்கும் அதிரடி நகர்வு
அமெரிக்காவின் sanctions-ல் சிக்குவதை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள waiver ஏப்ரல் 26, 2026 அன்று காலாவதியாக உள்ள நிலையில், இந்த அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளது. India Ports Global Ltd (IPGL) தனது பங்குகளை ஈரான் நாட்டு ஒரு நிறுவனத்திடம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த முதலீடு
இந்தியா, இந்த முக்கிய துறைமுகத்தின் மேம்பாட்டிற்காகவும், நவீன உபகரணங்களுக்காகவும் இதுவரை சுமார் $120 மில்லியன் (சுமார் ₹1000 கோடி) முதலீடு செய்துள்ளது. பாகிஸ்தானை தவிர்த்து, ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு செல்ல இது ஒரு முக்கிய வழியாகும். மேலும், இது 'International North-South Transport Corridor' (INSTC) -ன் ஒரு அங்கமாகவும் இருப்பதால், இந்தியா, மத்திய ஆசியா மற்றும் ரஷ்யா இடையேயான வர்த்தகத்தை பெருக்கும்.
உறவுகளை சமநிலைப்படுத்தும் முயற்சி
இந்த பங்குகளை விற்பனை செய்வது என்பது, இந்த துறைமுகத்தில் இருந்து இந்தியா முழுமையாக வெளியேறுகிறது என்பதல்ல. மாறாக, இது ஒரு 'Strategic Adjustment' என கூறப்படுகிறது. அமெரிக்காவுடனான உறவை பேணிக்காக்கும் அதே வேளையில், ஈரானுடனான தொடர்பையும் இந்தியா தக்கவைக்க முயல்கிறது. நேரடியாக தொடர்பில் இருப்பது, அமெரிக்க sanctions-க்கு வழிவகுக்கும் என சட்ட வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
நீண்ட கால நலன்களைக் காத்தல்
சான்ஸ்ஷன் காலம் முடியும் வரை, ஒரு உள்ளூர் ஈரான் நிறுவனம் இந்த துறைமுகத்தை நிர்வகிக்கும் ஒரு தற்காலிக ஏற்பாட்டையும் இந்தியா பரிசீலித்து வருகிறது. sanctions முடிந்த பிறகு, மீண்டும் கட்டுப்பாட்டை இந்தியா பெறும் என்ற நம்பிக்கையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உரிமை மாற்றம் செய்தாலும், இந்த முக்கிய துறைமுகத்தில் இந்தியாவின் நீண்ட கால நலன்களைப் பாதுகாக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது.
