மும்பையிலிருந்து டெல்லிக்குச் சென்ற கோல்டன் டெம்பிள் எக்ஸ்பிரஸ் ரயிலில், பயணியை தாக்கிய வெளிநாட்டு நபர் சூரத் ரயில் நிலையத்தில் போலீஸ் காவலில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சூரத் ரயில் நிலையத்தில், சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வெளிநாட்டு நபர் ஒருவர், போலீஸ் காவலில் இருந்தபோது திடீரென உயிரிழந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n\nமும்பையிலிருந்து டெல்லிக்குச் சென்றுகொண்டிருந்த கோல்டன் டெம்பிள் எக்ஸ்பிரஸ் ரயிலில், இவர் சக பயணிகளை தீயணைப்பு கருவி (Fire Extinguisher) கொண்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ரயில்வே போலீசார் அவரை கைது செய்து விசாரணைக்காக சூரத் ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.\n\nவிசாரணைக்காக ரயில்வே பாதுகாப்பு படை (RPF) மற்றும் அரசு ரயில்வே போலீஸ் (GRP) கட்டுப்பாட்டு அறைக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அந்த நபர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் அருகிலுள்ள SMIMER மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.\n\nஇந்த சம்பவம் குறித்து, போலீசார் விபத்து மரணம் என வழக்கு பதிவு செய்து, துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்த நபரின் அடையாளம் மற்றும் அவரது தேசியத்தை கண்டறியும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவரிடம் பயண ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில், அவரது மொபைல் போனை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், ரயிலில் சக பயணிகளுக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
