லாபம் ஏன் இவ்வளவு சரிந்தது?
Singapore Airlines-ன் இந்த லாப சரிவுக்கு முக்கிய காரணம், கடந்த ஆண்டு Vistara merger-ல் கிடைத்த ஒருமுறை கணக்கு லாபம் (SGD 1.098 பில்லியன்) இந்த முறை இல்லாததுதான். ஆனாலும், இதைவிட பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது Air India-வின் தொடர் நஷ்டங்கள்தான்.
Air India-வின் கடன் சுமை SIA-வை பாதிக்குதா?
ஆம், SIA தனது குழுவின் வருவாயில் 5% வளர்ச்சியைப் பதிவு செய்தும், அதாவது SGD 20.552 பில்லியன் ஈட்டியும், நிகர லாபம் 57.4% குறைந்து SGD 1.184 பில்லியன் ஆக உள்ளது. காரணம், Air India-வின் நஷ்டத்தில் SIA-வின் பங்கு SGD 846 மில்லியன் அதிகரித்துள்ளது. இதுவே முந்தைய காலத்தில் வெறும் நான்கு மாதங்களுக்கான கணக்கு மட்டுமே. தற்போது, Air India கிட்டத்தட்ட $2.8 பில்லியன் சாதனை நஷ்டத்தை பதிவு செய்துள்ளது. இதனால் SIA-க்கு மட்டும் சுமார் $743 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது SGD 6.27 என்ற விலையில் வர்த்தகமாகும் SIA-வின் சந்தை மூலதனம் (Market Cap) சுமார் SGD 19.7 பில்லியன் ஆகும். இதன் P/E Ratio 7.4 முதல் 8.25 வரை உள்ளது. கடந்த ஒரு வருடத்தில் இந்த ஷேர் கிட்டத்தட்ட 6% சரிந்து, 52 வார குறைந்த விலைக்கு அருகிலேயே வர்த்தகமாகிறது.
Air India-வின் சவால்களும், துறை நெருக்கடிகளும்
SIA-வின் 25.1% பங்குதாரரான Air India, உலகளாவிய சப்ளை செயின் சிக்கல்கள், முக்கிய சந்தைகளில் செயல்பாட்டு கட்டுப்பாடுகள், வான்வெளி தடைகள், மற்றும் அதிக எரிபொருள் விலைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மத்திய கிழக்கு பதற்றங்கள் விமான எரிபொருள் செலவுகளை அதிகரித்து, டெல்லி-சிகாகோ போன்ற வழித்தடங்களை பாதிக்கின்றன.
இதே சமயத்தில், Cathay Pacific நிறுவனம் HK$10.8 பில்லியன் லாபத்தையும், Emirates நிறுவனமும் சாதனை லாபத்தையும் பதிவு செய்துள்ளன.
முன்னர் JPMorgan போன்ற நிறுவனங்கள், SIA-வின் வருவாய் இலக்குகளை தவறவிட்டபோது ரேட்டிங்கை குறைத்தன. மேலும், Shareholder dilution பற்றிய கவலைகளும் எழுந்துள்ளன.
முதலீட்டாளர்களின் அச்சங்கள்
Air India-வின் $2.8 பில்லியன் நஷ்டம், ~$12.91 பில்லியன் கடன், மற்றும் 30% நிகர கடன்-பங்கு விகிதம் (Net Debt-to-Equity Ratio) ஆகியவை SIA-வின் நிதிநிலைக்கு பெரும் சுமையாக உள்ளன. பல ஆய்வாளர்கள் 'Hold' ரேட்டிங் கொடுத்துள்ளனர், அதாவது உடனடி ஏற்றம் குறைவாகவே இருக்கும் என்கிறார்கள்.
எதிர்கால பார்வை
SIA நிர்வாகம், Air India-வில் தனது 25.1% பங்கை நீண்டகால உத்திக்கு (Multi-hub Strategy) அவசியமானது என்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. Tata Sons உடன் இணைந்து Air India-வை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், எரிபொருள் விலை ஏற்ற இறக்கங்கள், செயல்பாட்டு செலவுகள், மற்றும் Air India-வின் ஒருங்கிணைப்பு சவால்கள் SIA-வின் எதிர்கால நிதி செயல்திறனுக்கு முக்கியமாக இருக்கும்.
