டெலிவரி ஊழியர்களின் வருமானம் பாதிப்பு!
Blinkit, Zepto, Swiggy போன்ற முன்னணி டெலிவரி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தற்போது பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 100 கிலோமீட்டர்கள் வரை பயணம் செய்யும் ஊழியர்களுக்கு, பெட்ரோல் விலை உயர்வு காரணமாக செலவுகள் அதிகரித்துள்ளன. இதனால், இவர்களின் வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.
கடந்த 12 முதல் 18 மாதங்கள் வரை, புதிய ஊழியர்களை ஈர்க்கவும், டெலிவரிகளை அதிகரிக்கவும் நிறுவனங்கள் அதிகளவில் இன்சென்டிவ் வழங்கின. ஆனால், தற்போது நிலைமை மாறிவிட்டது. நிறுவனங்கள் "consolidation phase" எனப்படும் ஒருங்கினைப்பு கட்டத்தில் இருப்பதால், லாபத்தை அதிகரிப்பதிலும், IPO-க்கு தயாராவதிலும் கவனம் செலுத்துகின்றன. இதனால், பரவலான இன்சென்டிவ் தொகையை குறைத்து, குறிப்பிட்ட சில தேவைகளுக்கு மட்டுமே ஊக்கத்தொகை வழங்குகின்றன.
டெலிவரி முறைகளில் மாற்றம்
குறிப்பாக, மதிய நேர உச்சத்தில் டெலிவரி தேவைகளை நிர்வகிக்கும் முறைகளில் மாற்றங்கள் வந்துள்ளன. சில ஆப்கள், அதிக வெயில் நேரங்களில் டெலிவரி ஊழியர்களின் பயண நேரத்தை குறைத்துள்ளன. மேலும், குறிப்பிட்ட பகுதிகளில் குறைந்த ஊழியர்களை மட்டுமே பணியில் வைத்துள்ளன. இப்போது, ஒரே நேரத்தில் பல ஆர்டர்களை எடுக்கும் (bucketing) பழக்கம் குறைக்கப்பட்டுள்ளது. அடிப்படை சம்பளம் நிலையாக இருந்தாலும், இன்சென்டிவ், மைல்கற்கள் மற்றும் நேர ஒதுக்கீடுகளைப் பொறுத்து மொத்த வருமானம் மாறுகிறது. குறிப்பாக, மாலை மற்றும் இரவு நேர ஆர்டர்களுக்கு அதிக ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
ஊழியர் பற்றாக்குறை தொடர்கிறது
பல்வேறு டெலிவரி ஆப்களில் ஊழியர் பற்றாக்குறை தொடர்ந்து ஒரு பிரச்சனையாகவே உள்ளது. ஒரு பகுதியில் ஊழியர்கள் பற்றாக்குறையாக இருக்கும்போது, வேறு சில பகுதிகளில் அதிகப்படியான ஊழியர்கள் உள்ளனர். டெலிவரி ஊழியர்களுக்கான தேவை தொடர்ந்து வளர்ந்தாலும், அதற்கேற்ப ஊழியர் விநியோகம் (supply) இல்லை. முன்பெல்லாம், நிறுவனங்கள் கண்மூடித்தனமாக செலவு செய்து ஊழியர்களை ஈர்த்தன. ஆனால், இந்த முறை அப்படி இல்லை. construction மற்றும் infrastructure போன்ற துறைகளுடன் ஒப்பிடும்போது, தற்போது ஆப்-சார்ந்த டெலிவரி வேலைகளில் ஊழியர் பற்றாக்குறை அதிகமாக காணப்படுகிறது.
