Air India நிறுவனத்தின் புதிய CEO-வாக Tewolde Gebremariam நியமிக்கப்பட்டுள்ளார். Campbell Wilson இடத்திற்கு இவர் வருவது, நிறுவனத்தின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் செயல்பாட்டு சீர்திருத்தங்களில் ஒரு முக்கிய மைல்கல்லாக கருதப்படுகிறது.
மும்பையில் உள்ள டாடா குழுமத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற போர்டு மீட்டிங்கில், ஏர் இந்தியாவின் தலைமை மாற்றத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. டாடா சன்ஸ் தலைவர் N. Chandrasekaran முன்னிலையில், Ethiopian Airlines-ன் முன்னாள் தலைவரான Tewolde Gebremariam புதிய CEO மற்றும் மேனேஜிங் டைரக்டராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஜூலை 2022 முதல் தலைமைப் பொறுப்பில் இருந்த Campbell Wilson-க்கு பதிலாக இந்த மாதம் இறுதியில் அவர் பொறுப்பேற்கிறார்.
AI தொழில்நுட்பத்தில் ஏர் இந்தியா
நிர்வாக மாற்றங்களைத் தாண்டி, ஏர் இந்தியா தனது சேவைத் தரத்தை உயர்த்த நவீன தொழில்நுட்பத்தை கையில் எடுத்துள்ளது. குறிப்பாக, Salesforce-ன் Agentforce AI தளத்தைப் பயன்படுத்தி வாடிக்கையாளர் சேவை தானியங்கி (Automate) செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், ரீபண்ட் (Refund) பணிகளை 2 வாரங்களுக்குப் பதில் வெறும் 4 மணி நேரத்திலும், பயணிகள் பெயர் மாற்றத்தை 3 நாட்களுக்குப் பதில் 30 நிமிடங்களிலும் செய்து முடிக்க முடிகிறது.
சவால்களும் முன்னால் இருக்கும் தடைகளும்
புதிய தலைமைக்கு முன்னால் சில முக்கியமான சவால்கள் காத்திருக்கின்றன. குறிப்பாக, ஜூன் 2025-ல் நடந்த AI171 விபத்திற்குப் பிறகு, பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு நெறிமுறைகள் மீது கடும் கண்காணிப்பு உள்ளது. மேலும், Vistara நிறுவனத்துடனான இணைப்பு, குறைந்த கட்டண விமானச் சேவைகளை ஒருங்கிணைத்தல், எரிபொருள் விலை ஏற்றம் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் எனப் பல சவால்களைச் சமாளித்து, நிறுவனத்தை நிலைநிறுத்த வேண்டிய கட்டாயத்தில் புதிய தலைமை உள்ளது.
