ஏவியேஷன் எரிபொருள் விலை உயர்வு மற்றும் செயல்பாட்டு சிக்கல்களை சமாளிக்க, Air India தனது ஐரோப்பிய சேவைகளை குறைத்து, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் கவனத்தை திருப்பியுள்ளது.
சர்வதேச விமான போக்குவரத்து நெட்வொர்க்கில் Air India பெரிய அளவிலான மறுசீரமைப்பை செய்துள்ளது. குறிப்பாக, லாபம் குறைவாக உள்ள ஐரோப்பிய ரூட்களை குறைத்துவிட்டு, அதிக தேவையுள்ள ஆசிய வழித்தடங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.
எந்தெந்த ரூட்கள் பாதிப்பு?
விண்டர் ஷெட்யூல் மாற்றத்தின் ஒரு பகுதியாக, டெல்லியில் இருந்து Copenhagen மற்றும் Vienna செல்லும் நேரடி விமானங்களை Air India தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இருப்பினும், வட அமெரிக்கா செல்லும் விமானங்களுக்கு Vienna ஒரு தொழில்நுட்ப நிறுத்தமாக (Technical Stop) தொடர்ந்து செயல்படும்.
மேலும், Birmingham, London-Gatwick மற்றும் San Francisco போன்ற முக்கிய வழித்தடங்களில் விமானங்களின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. விமான எரிபொருள் விலை உயர்வு மற்றும் நீண்ட தூர பயணங்களால் ஏற்படும் கூடுதல் செலவுகள், லாபத்தை பாதிப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆசிய சந்தையில் விரிவாக்கம்
ஐரோப்பாவில் சேவைகளை குறைத்தாலும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் Air India அதிரடியாக செயல்படுகிறது:
- Delhi-Sydney: வாரத்திற்கு 7 விமானங்களாக இருந்த எண்ணிக்கையை 11 ஆக உயர்த்தியுள்ளது.
- Delhi-Osaka: இந்த பிப்ரவரி முதல் வாரத்திற்கு 4 புதிய விமான சேவைகளைத் தொடங்குகிறது. ஜப்பானில் ஏற்கனவே Tokyo-Haneda இருக்கும் நிலையில், Osaka இரண்டாவது டெஸ்டினேஷனாக மாறுகிறது.
டாடா குரூப் வியூகம்
இந்த மாற்றம் Tata Group-ன் ஒட்டுமொத்த வளர்ச்சி திட்டத்தின் ஒரு அங்கமாகும். Airbus மற்றும் Boeing நிறுவனங்களிடம் இருந்து நூற்றுக்கணக்கான புதிய விமானங்களை வாங்கும் பணியில் நிறுவனம் ஈடுபட்டுள்ள நிலையில், இருக்கும் விமானங்களை திறமையாக பயன்படுத்தி லாபத்தை அதிகரிக்க நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது.
வரவிருக்கும் காலாண்டுகளில் இந்த புதிய ரூட்கள் நிறுவனத்தின் செயல்பாட்டு லாபத்தை எந்தளவுக்கு உயர்த்தப் போகிறது என்பதை முதலீட்டாளர்கள் உற்றுநோக்குகின்றனர்.
