அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 'Artificial Intelligence' என்ற பெயரை 'Super Intelligence' என மாற்ற உத்தரவிட்டுள்ளார். இதனுடன், உலகின் முன்னணி நிறுவனங்கள் ஒன்றிணைந்து புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள புதிய உத்தரவின்படி, இனி அனைத்து மத்திய அரசு அலுவலகங்களிலும் 'Artificial Intelligence' (AI) என்ற வார்த்தைக்கு பதிலாக 'Super Intelligence' (SI) என்ற பெயரே பயன்படுத்தப்பட வேண்டும். இந்த மாற்றம் வெறும் பெயரளவு மாற்றமாக இருந்தாலும், மேம்பட்ட தொழில்நுட்ப அமைப்புகளை சாதாரண ஆட்டோமேஷனில் இருந்து வேறுபடுத்தி காட்ட அரசு எடுக்கும் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இதற்காக அடுத்த 60 நாட்களுக்குள் தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
டெக் நிறுவனங்களின் புதிய ஒப்பந்தம்
இந்த உத்தரவோடு சேர்த்து, Anthropic, Google, Meta, NVIDIA, OpenAI மற்றும் xAI ஆகிய ஆறு முன்னணி நிறுவனங்கள் 'Joint Commitment on Frontier Responsibilities' என்ற பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இது சட்டப்பூர்வமாக கட்டாயமில்லை என்றாலும், 'தார்மீக கடமை' அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 4 அடுக்கு பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்பட வேண்டும்:
- சைபர் மற்றும் பயோ-செக்யூரிட்டி அபாயங்களை கண்காணிக்க வலுவான உள்நாட்டு கட்டுப்பாடுகள்.
- இவற்றைக் கண்காணிக்க பிரத்யேக குழுக்கள்.
- வெளிப்படையான மூன்றாம் தரப்பு தணிக்கை (External Audits).
- நிர்வாகக் குழுவில் பாதுகாப்பு சார்ந்த தனிப்பட்ட கமிட்டி.
முதலீட்டாளர்களுக்கு இது என்ன சொல்கிறது?
தற்போதைய நிலவரப்படி, இந்த ஒப்பந்தம் முதலீட்டாளர்களுக்கு ஒரு நல்ல செய்திதான். கடுமையான சட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படாததால், நிறுவனங்களின் வளர்ச்சி பாதிக்கப்படாது. அமெரிக்காவின் 'AI' சந்தை போட்டித்தன்மை மாறாமல் இருக்கும் எனத் தெரிகிறது. டேட்டா சென்டர்கள் மற்றும் கம்ப்யூட்டிங் பவர் சார்ந்த முதலீடுகள் தொடர்ந்து அதிகரிக்கும்.
இருப்பினும், வருங்காலத்தில் இந்த தானாக முன்வரும் கட்டுப்பாடுகள் தோல்வியடைந்தால், அரசு சட்டப்பூர்வமான கடுமையான விதிகளை கொண்டு வரலாம் என்பது ஒரு மறைமுக ஆபத்தாகும். அவ்வாறு நடந்தால், நிறுவனங்களுக்கு செலவுகள் (Compliance Cost) கணிசமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, இந்த பாதுகாப்பு தணிக்கை சார்ந்த மென்பொருள் மற்றும் சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் பங்குகள் வரும் காலங்களில் புதிய கவனத்தைப் பெறலாம்.
