Global Fintech Festival 2026-ல் Visa மற்றும் ONDC இணைந்து இந்தியாவின் சுற்றுலா பயண திட்டமிடலை எளிதாக்க புதிய கூட்டணியை அறிவித்துள்ளன. AI உதவியுடன் பயணங்களை வடிவமைக்கும் இந்த முயற்சி, உள்ளூர் வணிகங்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.
Global Fintech Festival 2026 நிகழ்வில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த கூட்டணி, இந்திய சுற்றுலா பயணிகளின் அனுபவத்தை முற்றிலுமாக மாற்றும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. Visa-வின் டிஜிட்டல் தொழில்நுட்பத்தையும், ONDC-யின் ஓபன் நெட்வொர்க் கட்டமைப்பையும் இணைப்பதன் மூலம், பயணிகள் மற்றும் சுற்றுலா சேவை வழங்குநர்களுக்கு இடையே ஒரு நேரடி டிஜிட்டல் பாலத்தை இது அமைக்கிறது.
சிறு வணிகங்களுக்கு இது ஜாக்பாட்?
இந்திய சுற்றுலாத் துறை தற்போது பல பிரிவுகளாக சிதறிக்கிடக்கிறது. இந்தச் சிக்கலைத் தீர்க்க AI-ஐப் பயன்படுத்தி பயணத் திட்டங்களை (AI-driven itineraries) உருவாக்கும் முயற்சியில் இந்தத் தளம் இறங்கியுள்ளது. இதன் மூலம் பெரிய ட்ராவல் நிறுவனங்களை மட்டும் நம்பியிருக்காமல், சிறிய மற்றும் நடுத்தர சுற்றுலா நிறுவனங்கள் பயணிகளின் கண்களில் படும் வாய்ப்பு அதிகரிக்கும்.
அரசாங்கத்தின் ஆதரவு
ச Retail மற்றும் லாஜிஸ்டிக்ஸ் துறையில் ஏற்கனவே வெற்றியைப் பதிவு செய்துள்ள ONDC, தற்போது சுற்றுலாத் துறையிலும் காலடி எடுத்து வைத்துள்ளது. இதற்கு மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் முழுமையான ஆதரவும் உள்ளது. இதன் மூலம் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்கள் மட்டுமின்றி, மறைந்துள்ள பல இடங்களையும் பயணிகள் கண்டறிய ஊக்குவிக்கப்படுவார்கள்.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
முதலீட்டாளர்கள் ஒரு முக்கியமான விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்: ONDC என்பது அரசு ஆதரவு பெற்ற லாப நோக்கமற்ற அமைப்பு, இது பங்குச் சந்தையில் லிஸ்ட் செய்யப்படவில்லை. மறுபுறம், NYSE-ல் பட்டியலிடப்பட்டுள்ள Visa-வின் இந்தத் திட்டம் ஒரு ஆரம்பகட்ட 'Pilot project' மட்டுமே. எனவே, உடனடியாக Visa-வின் வருவாயில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.
இந்தத் திட்டத்தின் வெற்றி என்பது, பயணிகளிடையே இந்தத் தளம் எவ்வளவு தூரம் சென்றடைகிறது என்பதையும், உள்ளூர் விற்பனையாளர்களை எந்தளவு தடையின்றி இந்த நெட்வொர்க்கில் இணைக்கிறார்கள் என்பதையும் பொறுத்தே அமையும்.
