அமெரிக்க அரசு TCS, Infosys, Wipro மற்றும் Cognizant உள்ளிட்ட முக்கிய IT நிறுவனங்களை PERM ப்ரோக்ராமில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது. கிரீன் கார்டு (Green Card) ஸ்பான்சர் செய்வதற்கு இது மிக முக்கியமான நடைமுறை என்பதால், இந்த நடவடிக்கை இந்திய IT நிறுவனங்களுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
அமெரிக்க அரசின் இந்த அதிரடி உத்தரவு, இந்திய IT ஜாம்பவான்களான Tata Consultancy Services (TCS), Infosys மற்றும் Wipro ஆகிய நிறுவனங்களுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் நிரந்தரக் குடியுரிமை (Green Card) பெறத் தேவையான PERM (Program Electronic Review Management) அமைப்பிலிருந்து இந்த நிறுவனங்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளன.
எதனால் இந்தத் தடை?
அமெரிக்க துணைத் தலைவர் JD Vance மற்றும் தொழிலாளர் துறை செயலாளர் Keith Sonderling ஆகியோர், இந்த நிறுவனங்கள் H-1B மற்றும் PERM வழிகளை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். உள்நாட்டு அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளைப் பறிப்பதாகவும், ஊதியத்தை இடிப்பதற்குக் காரணமாக இருப்பதாகவும் அரசின் தரப்பில் சொல்லப்படுகிறது. இந்த அதிரடி நடவடிக்கையில் Microsoft, Adobe, Cognizant மற்றும் Capgemini போன்ற பன்னாட்டு நிறுவனங்களும் சிக்கியுள்ளன.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை:
- நிபுணர்கள் வெளியேற்றம்: வெளிநாட்டுத் திறமையாளர்களுக்கு 'கிரீன் கார்டு' உறுதியளிக்க முடியாத சூழல் ஏற்பட்டால், சிறந்த திறமையாளர்களைத் தக்கவைப்பது (Talent Retention) நிறுவனங்களுக்குக் கடினமாகிவிடும். அவர்கள் போட்டி நிறுவனங்களுக்கு மாற வாய்ப்புள்ளது.
- இயக்கச் செலவு உயர்வு: உள்ளூர் அமெரிக்க ஊழியர்களை அதிக ஊதியத்தில் பணியமர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், நிறுவனங்களின் லாப வரம்பு (Profit Margins) கடுமையாகப் பாதிக்கப்படலாம்.
- தொழில்முறை மாற்றம்: அமெரிக்க சந்தையை அதிகம் நம்பியிருக்கும் இந்திய நிறுவனங்கள், தங்களின் பிசினஸ் மாடலில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
இது வெறும் விசா பிரச்சினை மட்டுமல்ல, அமெரிக்க அரசின் கடுமையான ஒழுங்குமுறை மாற்றத்தின் தொடக்கம்.Harvard, Yale, Stanford போன்ற பல்கலைக்கழகங்களும் ஜே-1 (J-1) விசா விவகாரத்தில் விசாரணைக்கு உள்ளாகியுள்ளதால், ஒட்டுமொத்த சூழலும் மிகக் கவனமாக கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக மாறியுள்ளது.
