அமெரிக்காவின் AI தொழில்நுட்பத்தை திருடி, முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக Alibaba, DeepSeek உள்ளிட்ட சீன நிறுவனங்கள் மீது அமெரிக்க பாதுகாப்பு அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த விவகாரம் சர்வதேச டெக் சந்தையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் NSA, CISA மற்றும் FBI ஆகிய பாதுகாப்பு அமைப்புகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், சீன நிறுவனங்கள் அமெரிக்காவின் AI தொழில்நுட்பங்களை முறையற்ற வகையில் கையாளுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Alibaba, DeepSeek, Moonshot AI, MiniMax, StepFun மற்றும் Z.ai ஆகிய நிறுவனங்கள், 'Knowledge Distillation' எனும் முறையைப் பயன்படுத்தி ChatGPT, Gemini மற்றும் Claude போன்ற முன்னணி அமெரிக்க மாடல்களைத் திருடித் தங்கள் சொந்த அமைப்புகளை உருவாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சீனாவின் மறுப்பு
சீன வெளியுறவு அமைச்சகம் இந்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இவை முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், சீன நிறுவனங்கள் சொந்த முயற்சியிலும் புத்தாக்கத்திலுமே வளர்ந்து வருவதாகவும் பெய்ஜிங் வாதிடுகிறது. அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அதிபர் ஷி ஜின்பிங் இடையிலான தொழில்நுட்பத் தலைமை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முன்னதாக எழுந்துள்ள இந்த மோதல், சர்வதேச அளவில் உற்றுநோக்கப்படுகிறது.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு
இந்த விவகாரத்தால் உலகளாவிய தொழில்நுட்பத் துறையில் அரசியல் மற்றும் ஒழுங்குமுறை அபாயங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக DeepSeek நிறுவனம் தனது IPO-விற்காக $71 பில்லியன் மதிப்பீட்டை இலக்காகக் கொண்டுள்ள நிலையில், இந்த அமெரிக்காவின் கெடுபிடிகள் சந்தையில் பெரும் சரிவை ஏற்படுத்தக்கூடும். அமெரிக்கா புதிய தடைகளை விதித்து, இந்த நிறுவனங்களின் கணினி வளங்களை அணுகுவதைத் தடுத்தால், அது ஒட்டுமொத்த டெக் சப்ளை செயினையும் பாதிக்கும்.
முதலீட்டாளர்கள் வரும் நாட்களில் Google, OpenAI மற்றும் Anthropic போன்ற நிறுவனங்கள் API பயன்பாட்டில் கொண்டு வரும் கட்டுப்பாடுகளைக் கவனிக்க வேண்டும். மேலும், அமெரிக்க கருவூலத் துறை (US Treasury) ஏதேனும் புதிய பொருளாதாரத் தடைகளை அறிவிக்கிறதா என்பதைப் பொறுத்தே எதிர்கால சந்தை நகர்வுகள் அமையும்.
