Telegram அக்கவுண்ட்களை குறிவைத்து நடக்கும் புதிய வகை ஹேக்கிங் முறை முதலீட்டாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாய்ஸ்மெயில் (Voicemail) வசதியை பயன்படுத்தி ஓடிபி (OTP) திருடப்படுவதால், உங்கள் நிதித் தகவல்கள் பாதுகாப்பில் கூடுதல் கவனம் தேவை.
என்ன நடக்கிறது?
சுவிட்சர்லாந்தை சேர்ந்த EverdreamSoft நிறுவனத்தின் சிஇஓ ஷாபன் ஷாமே (Shaban Shaame) என்பவரின் அக்கவுண்ட் சமீபத்தில் ஹேக் செய்யப்பட்டது. இது எப்படி நடந்தது என்றால், ஹேக்கர்கள் பயனரின் போனுக்கு தொடர்ச்சியாக சைலண்ட் கால்களை (Silent calls) செய்து, லைனை பிஸியாக வைத்திருந்தனர். அப்போது டெலிகிராம் ஆப் வெரிபிகேஷன் கோடுக்காக அழைக்கும்போது, அது வாய்ஸ்மெயிலுக்குச் சென்று விடுகிறது. ஹேக்கர்கள் அந்த வாய்ஸ்மெயிலை ரிமோட் மூலம் ஆக்சஸ் செய்து கோடை திருடி அக்கவுண்ட்டை லாக் செய்து விடுகின்றனர்.
இந்திய முதலீட்டாளர்களுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை
இந்தியாவில் லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை ஆலோசனைகள் மற்றும் செய்திகளுக்காக டெலிகிராம் குரூப்களை நம்பியுள்ளனர். SEBI மற்றும் NSE போன்ற அமைப்புகள் ஏற்கனவே இது போன்ற ஆபத்தான குரூப்கள் குறித்து எச்சரித்துள்ளன. ஹேக்கர்கள் உங்கள் அக்கவுண்ட்டை கைப்பற்றினால், உங்கள் பெயரில் தவறான முதலீட்டு ஆலோசனைகளை பரப்பவும், உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடவும் வாய்ப்புள்ளது.
உங்களை எப்படி பாதுகாத்துக்கொள்வது?
- Two-Step Verification: டெலிகிராம் செட்டிங்ஸில் சென்று உடனடியாக டூ-ஸ்டெப் வெரிஃபிகேஷனை எனேபிள் செய்யுங்கள்.
- Voicemail PIN: உங்கள் மொபைல் நெட்வொர்க் நிறுவனத்தை தொடர்பு கொண்டு, வாய்ஸ்மெயிலுக்கு ஒரு வலுவான பாஸ்வேர்ட் (PIN) செட் செய்யுங்கள் அல்லது ரிமோட் வாய்ஸ்மெயில் அணுகலை முற்றிலுமாக முடக்கி விடுங்கள்.
- பாதுகாப்பு: வெறும் SMS அல்லது கால் அடிப்படையிலான வெரிஃபிகேஷனை மட்டும் நம்பாமல், கூடுதலான பாதுகாப்பு வசதிகளை பயன்படுத்துவது உங்கள் நிதிச் சொத்துக்களுக்கு நல்லது.
