Open-source மென்பொருட்களைப் பயன்படுத்தும் நாடாக இருந்த இந்தியா, இப்போது உலகளாவிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் முக்கிய சக்தியாக மாறியுள்ளதாக Red Hat தெரிவித்துள்ளது. பெங்களூரு மற்றும் புனே போன்ற நகரங்களில் உள்ள இந்திய பொறியாளர்கள் PyTorch போன்ற முக்கிய AI என்ஜின்களை வடிவமைப்பதில் களமிறங்கியுள்ளனர்.
மாறிய பொறியியல் முகவரி
பல ஆண்டுகளாக, இந்தியாவின் தொழில்நுட்ப மையங்கள் வெறும் சப்போர்ட் மற்றும் பிசினஸ் ஆப்ஸ்களை உருவாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தன. ஆனால், இப்போது அந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. குறிப்பாக, பெங்களூரு மற்றும் புனே நகரங்கள் வெறும் சேவை மையங்களாக இல்லாமல், சிக்கலான குவாலிட்டி இன்ஜினியரிங் (Quality Engineering) ஹப்களாக உருவெடுத்துள்ளன. Red Hat தனது உலகளாவிய R&D பணிகளை இந்தியாவுக்கு மாற்றும் முடிவால், இந்திய திறமையாளர்களுக்குக் கூடுதல் வாய்ப்புகள் கிடைத்துள்ளன.
IBM உடன் இணைப்பில் உள்ள சவால்கள்
இந்த வளர்ச்சி உற்சாகமாக இருந்தாலும், Red Hat நிறுவனத்திற்கு ஒரு சவால் காத்திருக்கிறது. அதன் தாய் நிறுவனமான IBM உடன் நிர்வாக ரீதியாக இணையும் போது (Integration), Red Hat-ன் தனித்துவமான ஓபன் சோர்ஸ் கலாச்சாரம் பாதிக்கப்படுமா என்ற கேள்வி முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும், லைசென்சிங் (Licensing) மற்றும் லினக்ஸ் (Linux) தயாரிப்புகள் தொடர்பான சில முடிவுகள் டெவலப்பர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. ஓபன் சோர்ஸ் சமூகத்தின் நம்பிக்கையைத் தக்கவைத்துக்கொண்டு, IBM-ன் கார்ப்பரேட் கட்டமைப்பிற்குள் எப்படி நிறுவனம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளப்போகிறது என்பதே இப்போதைய மிகப்பெரிய சவால்.
இந்த மாற்றங்கள் இந்திய பொறியாளர்களின் தகுதியை உலகிற்கு நிரூபித்தாலும், IBM நிறுவனத்தின் ஒட்டுமொத்த வணிக வளர்ச்சியும், இந்த புதிய R&D வியூகமும் எந்த அளவுக்கு கைகொடுக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
