சைபர்குளோபல் நிறுவனமான Protectt.ai, Bosch நிறுவனத்தின் அங்கமான AIShield-இல் பெரும்பான்மை பங்குகளை வாங்கியுள்ளது. இதன் மூலம் மொபைல் பாதுகாப்பு மற்றும் AI பாதுகாப்பு ஆகிய இரண்டும் இணைந்து, வங்கித் துறையின் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் திட்டமிட்டுள்ளது.
சைபர் செக்யூரிட்டி துறையில் முன்னணி நிறுவனமான Protectt.ai Labs Private Limited, Bosch Global Software Technologies-ன் கீழ் வளர்ந்த AIShield நிறுவனத்தின் பெரும்பான்மை பங்குகளைக் கையகப்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலதன முதலீடு மற்றும் பங்கு விற்பனை மூலம் முடிவுக்கு வந்துள்ளது. இனி இந்த நிறுவனம் AI Shield Private Limited என்ற பெயரில் சுதந்திரமாகச் செயல்படும்.
தொழில்நுட்ப பலம் என்ன?
AIShield வசம் 40-க்கும் மேற்பட்ட காப்புரிமை விண்ணப்பங்கள் மற்றும் 11 அங்கீகரிக்கப்பட்ட காப்புரிமை குடும்பங்கள் உள்ளன. இவை AI தொழில்நுட்பத்தில் ஏற்படும் 'Prompt injection' மற்றும் இதர பாதிப்புகளைத் தடுப்பதில் மிகச்சிறந்தவை. Protectt.ai-யின் மொபைல் பாதுகாப்புடன், AIShield-ன் இந்த அதிநவீன AI பாதுகாப்பு அம்சங்கள் இணைக்கப்படுவது நிறுவனத்திற்குப் பெரிய பலமாகும்.
BFSI துறையின் புதிய இலக்கு
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் (BFSI) தற்போது AI தொழில்நுட்பத்திற்கு மாறி வருகின்றன. அதே சமயம், தரவு பாதுகாப்பு மற்றும் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதில் கடுமையான கட்டுப்பாடுகளையும் அவர்கள் எதிர்கொள்கின்றனர். இந்த ஒப்பந்தம், 'Sovereign AI' என்ற அடிப்படையில் நிதி நிறுவனங்களுக்குத் தேவையான பாதுகாப்பான சேவைகளை வழங்க உதவும். இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் எனப் பல நாடுகளில் தனது சேவையை விரிவுபடுத்த Protectt.ai திட்டமிட்டுள்ளது.
இந்த ஒருங்கிணைப்பு தொழில்நுட்ப ரீதியாகச் சிறப்பாகத் தெரிந்தாலும், செயல்பாட்டு ரீதியாக இதைக் கையாள்வதில் உள்ள சவால்களை நிறுவனம் எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதைச் சந்தை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
