OpenAI சிஸ்டத்தில் இருந்த பலவீனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். Anthropic-ன் Claude 3.5 Opus AI-ஐ பயன்படுத்தி இந்த ஊடுருவல் நடத்தப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு குறைபாடு தற்போது சரிசெய்யப்பட்டாலும், AI மூலம் சைபர் தாக்குதல்கள் எளிதாகியுள்ளது தொழில்நுட்ப உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சைபர் தாக்குதலில் AI-ன் அதிரடி பங்கு
சமீபத்திய பக்-பவுண்டி (Bug-Bounty) திட்டத்தின் போது, ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று OpenAI-ன் உள் அமைப்புகளில் ஊடுருவியுள்ளது. இதற்காக Anthropic நிறுவனத்தின் Claude 3.5 Opus மாடலை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். வெறும் சில மணிநேரங்களில் இந்த சிக்கலான எக்ஸ்ப்ளோய்ட் (Exploit) குறியீடுகளை AI மூலம் உருவாக்கி, சிஸ்டத்தின் பிழைகளை அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
எங்கே பிழை ஏற்பட்டது?
இந்த பாதுகாப்பு குறைபாடு OpenAI-ன் சொந்த ஏஐ மாடல்களில் இல்லை. மாறாக, அவர்களது கம்யூனிட்டி ஃபோரம் இயங்கும் Discourse எனும் மூன்றாம் தரப்பு தளத்தில் இருந்த libheif என்ற டூலில் தான் இந்த பிழை இருந்தது. இதில் நீண்டகாலமாக கண்டறியப்படாத 'மெமரி பக்' (Memory Bug) இருந்ததால், அது பாதுகாப்பு வளையத்தை மீற உதவியது.
தொழில்நுட்ப உலகிற்கு எச்சரிக்கை
முன்பெல்லாம் இதுபோன்ற ஒரு பிழையை கண்டறிய வாரங்கள் அல்லது மாதங்கள் தேவைப்படும். ஆனால், இப்போது AI-ன் உதவியால் சில மணிநேரங்களிலேயே தாக்குதலை நடத்த முடிகிறது. இது முதலீட்டாளர்களுக்கும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் புதிய தலைவலியை உருவாக்கியுள்ளது.
இனி வரும் காலங்களில், நிறுவனங்கள் தங்கள் சொந்த சாப்ட்வேர் மட்டுமல்லாது, தாங்கள் பயன்படுத்தும் அனைத்து மூன்றாம் தரப்பு மென்பொருட்களையும் (Third-party software) கூடுதல் கவனத்துடன் கண்காணிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஜூலை 27-ம் தேதிக்குள் இந்த குறைபாடு சரிசெய்யப்பட்டாலும், AI-ஆல் அதிகரிக்கும் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் டெக் நிறுவனங்களின் செலவுகளை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
