Nvidia தனது AI சிப்களை இன்ஸ்டால் செய்ய Nscale நிறுவனத்தின் West Virginia டேட்டா சென்டர் திட்டத்திற்கு பில்லியன் கணக்கான டாலர் கடன் உத்தரவாதம் அளிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
Nvidia வழக்கமாக சிப்களை விற்பது மற்றும் உபகரணங்களுக்கு நிதி உதவி அளிப்பதுடன் தனது வணிகத்தை நிறுத்தி கொள்ளும். ஆனால் இப்போது, கட்டுமானக் கடன்களுக்கும் உத்தரவாதம் அளிக்கும் ஒரு பெரிய மாற்றத்தை நோக்கி நகர்கிறது. இந்த புதிய ஒப்பந்தத்தின்படி, Nscale நிறுவனம் தனது கடன் கடமைகளைச் சரியாகச் செய்யத் தவறினால், அந்த டேட்டா சென்டரின் கட்டுப்பாட்டை Nvidia எடுத்துக்கொள்ளும்.
ஏன் இந்த அதிரடி முடிவு?
Nvidia-வின் அடுத்த தலைமுறை Vera Rubin சிப்களுக்கு பாதுகாப்பான தளம் தேவைப்படுகிறது. இதற்காகவே, Anthropic நிறுவனம் இந்த டேட்டா சென்டரை ஒரு முக்கிய மையமாகப் பயன்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த உள்கட்டமைப்பு பணிகளில் ஏற்படும் நிதிச் சிக்கல்கள், Nvidia-வின் வருவாயைப் பாதிக்காமல் இருக்கவே இந்த ‘Backstop’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய ஆபத்துகள்:
இந்தத் திட்டம் பெரும் சவால்களைக் கொண்டுள்ளது:
- செயல்பாட்டு இடர்கள்: Nscale தளம் ஏற்கனவே வெள்ள அபாயங்கள் போன்ற சுற்றுச்சூழல் சவால்களைச் சந்தித்துள்ளது, இது திட்டத்தின் காலக்கெடுவை பாதிக்கலாம்.
- நிதிச் சுமை: AI உள்கட்டமைப்பு என்பது அதிக மூலதனம் தேவைப்படும் துறை. வட்டி விகிதங்கள் அதிகமாக இருக்கும் இந்தச் சூழலில், பெரிய அளவிலான கடன் திட்டங்கள் அபாயகரமானவை.
- டெவலப்பர் ஸ்திரத்தன்மை: Anthropic போன்ற நிறுவனங்களின் நீண்டகால நிதி நிலைத்தன்மை குறித்த கவலைகளும் சந்தையில் எழுந்துள்ளன.
வழக்கமான சிப் தயாரிப்பாளர் என்ற நிலையிலிருந்து மாறி, கடன் அபாயங்களையும் Nvidia தன்வசம் எடுத்துக்கொள்வது அந்த நிறுவனம் AI கட்டமைப்பை உருவாக்க எவ்வளவு முனைப்பு காட்டுகிறது என்பதைக் காட்டுகிறது. இருப்பினும், இந்தத் திட்டம் தாமதமானாலோ அல்லது கூடுதல் செலவுகள் ஏற்பட்டாலோ அது Nvidia-வின் லாபத்தைப் பாதிக்கும் என்பது நிபுணர்களின் கருத்து.
