The New York Times மற்றும் முன்னணி ஊடகங்கள் இணைந்து Brave Software மீது வழக்கு தொடர்ந்துள்ளன. அனுமதி இன்றி சுமார் 30 பில்லியன் கட்டுரைகளை AI பயிற்சிக்காகத் திருடியதாகவும், பே-வால்களை (Paywalls) தகர்த்ததாகவும் புகார் எழுந்துள்ளது.
The New York Times, New York Daily News, Chicago Tribune மற்றும் Orlando Sentinel ஆகிய ஊடக நிறுவனங்கள் இணைந்து, அமெரிக்காவின் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் Brave Software மீது வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த பிரைவசி சார்ந்த பிரவுசர் நிறுவனம், எவ்வித அனுமதியும் இன்றி சுமார் 3000 கோடிக்கும் மேலான இணையப்பக்கங்களை 'Brave Index' உருவாக்கத் திரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வர்த்தக ரீதியான முறைகேடு
இந்த இன்டெக்ஸ் என்பது ஒரு சாதாரண சர்ச் டூல் மட்டுமல்ல, இது ஒரு கமர்ஷியல் ப்ராடக்ட் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளை Anthropic, Perplexity, Mistral, xAI மற்றும் Cohere போன்ற AI நிறுவனங்களுக்கு விற்பனை செய்து Brave லாபம் ஈட்டியுள்ளது. இது பதிப்புரிமைச் சட்டத்திற்கு எதிரானது என்பது ஊடகங்களின் வாதம்.
வருவாய் இழப்புப் புகார்
Brave பிரவுசரில் உள்ள 'Ad-blocking' மற்றும் 'Paywall blocker' அம்சங்கள் ஊடக நிறுவனங்களின் வருவாயை நேரடியாகப் பாதிப்பதாகக் கூறப்படுகிறது. வாசகர்கள் சந்தா கட்டி வாசிக்கும் கட்டுரைகளைத் தடுப்பதோடு, அந்த இடத்தில் Brave தனது சொந்த விளம்பரங்களை வைத்துப் பணம் சம்பாதிப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
நிறுவனத்தின் தற்போதைய நிலை
2015-ல் தொடங்கப்பட்ட Brave ஒரு தனியார் நிறுவனம். இது பங்குச்சந்தையில் பட்டியலிடப்படவில்லை. $100 மில்லியன் க்கும் அதிகமான ஆண்டு வருவாயும், 130 மில்லியன் மாதாந்திர பயனர்களையும் கொண்ட இந்த நிறுவனம், தற்போது மிகப்பெரிய சட்டப் போராட்டத்தைச் சந்திக்கிறது. நீதிமன்றம் இதற்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்தால், நிறுவனத்தின் எதிர்கால பிசினஸ் மாடலே மாறக்கூடிய சூழல் உருவாகியுள்ளது.
