பாரம்பரிய டைரக்டரி சேவையை கைவிட்டு, மென்பொருள் சார்ந்த (SaaS) வணிக மாதிரியை நோக்கி Just Dial அடியெடுத்து வைக்கிறது. இதன் மூலம் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை ஈர்க்கவும், தேக்கமடைந்துள்ள வருவாயை உயர்த்தவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பாரம்பரியமாகத் தகவல்களை வழங்கும் டைரக்டரி சேவையாக இருந்த Just Dial, தற்போது முழுவதுமாக தனது வணிக உத்தியை மாற்றியமைத்துள்ளது. சி.இ.ஓ (CEO) தின்கர் அயிலவரப்பு தலைமையின் கீழ், சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கு (SMBs) இன்வெண்டரி, பில்லிங் மற்றும் ஷெட்யூலிங் போன்ற அன்றாட பணிகளை நிர்வகிக்கும் சாப்ட்வேர் டூல்களை வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
வணிகத் தந்திரம் என்ன?
சோலார் பேனல் நிறுவுதல், பூச்சிக் கட்டுப்பாடு மற்றும் லாஜிஸ்டிக்ஸ் போன்ற குறிப்பிட்ட துறைகளை இலக்காகக் கொண்டு இந்த மென்பொருள் சேவைகளை Just Dial களமிறக்குகிறது. இதன் மூலம், வெறும் விளம்பரத் தளமாக இல்லாமல், வணிகங்களுக்குத் தேவையான அத்தியாவசிய கருவியாகத் திகழ்ந்து, வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக் கொள்ள (Platform stickiness) நிறுவனம் முயற்சி செய்கிறது.
வருவாய் சவால்கள்
நிறுவனத்திடம் 5.74 கோடி listings இருந்தாலும், அவற்றை பணம் செலுத்தும் சந்தாதாரர்களாக (Paid Subscribers) மாற்றுவதில் பெரிய சிக்கல் நீடிக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக, ஒரு பயனருக்கான சராசரி வருவாய் (ARPU) சுமார் ₹4,825 என்ற அளவிலேயே தேக்கமடைந்துள்ளது. Reliance Retail மற்றும் Jio Platforms பின்புலம் இருந்தாலும், வலுவான நிதி வளர்ச்சியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் Just Dial உள்ளது.
போட்டி மற்றும் ரிஸ்க்குகள்
தனிப்பட்ட துறைகளுக்கென பிரத்யேகமாக இயங்கும் மொபைல் ஆப்ஸ்கள் (Vertical-specific apps) கடுமையான போட்டியை ஏற்படுத்தி வருகின்றன. இவை நேரடி புக்கிங் மற்றும் டெலிவரி வசதிகளை வழங்குவதால், மக்கள் அவற்றை அதிகம் நாடுகின்றனர். இந்த புதிய சாப்ட்வேர் மாற்றம் எந்த அளவுக்கு பயனர்களைக் கவர்ந்து, நிறுவனத்தின் லாபத்தை உயர்த்தும் என்பதுதான் முதலீட்டாளர்கள் கவனிக்கும் முக்கிய விஷயமாக உள்ளது.
