மத்திய IT அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அடுத்த ஒரு மாதத்திற்குள் செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த புதிய கலந்தாய்வு அறிக்கை (Consultation Paper) வெளியாகிறது. டீப்ஃபேக் (Deepfake) மற்றும் சைபர் பாதுகாப்பை உறுதி செய்ய, பிரைவேட் கம்பெனிகள் மீது கூடுதல் பொறுப்புகளை சுமத்தும் 'டெக்னோ-லீகல்' (Techno-legal) முறையை அரசு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.
'டெக்னோ-லீகல்' அணுகுமுறை என்ன?
இந்திய அரசு இந்த முறை வெறும் சட்டங்களாக மட்டும் பார்க்காமல், 'டெக்னோ-லீகல்' (Techno-legal) அணுகுமுறையை கையில் எடுக்கிறது. அதாவது, டெக்னாலஜி வளர்ச்சியையும், அதற்கான சட்டப்பூர்வ பொறுப்புகளையும் இணைப்பதே இதன் நோக்கம். இனி பயனாளர்களின் பாதுகாப்பு மற்றும் தவறான தகவல்கள் பரவுவதைத் தடுப்பதற்கான முதன்மை பொறுப்பு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களையே சாரும் என்று அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்த முயற்சி, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட IndiaAI Mission-ன் ஒரு முக்கிய அங்கமாகும். எதிர்காலத்தில் AI-ஐ பொறுப்புடன் பயன்படுத்துவதை உறுதி செய்யவும், அதே நேரத்தில் நாட்டின் கண்டுபிடிப்புகளை (Innovation) ஊக்குவிக்கவும் இந்த அறிக்கை உதவும்.
முதலீட்டாளர்களுக்கு என்ன தாக்கம்?
டெக் நிறுவனங்களை பொறுத்தவரை, புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்தால், compliance செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, ஜெனரேட்டிவ் AI (Generative AI) மாடல்களை உருவாக்கும் கம்பெனிகள், கடுமையான பாதுகாப்பு அம்சங்களை (Safety Guardrails) புகுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
IT அமைச்சகத்தின் இந்த நடவடிக்கையைத் தாண்டி, பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான SEBI-ம், செக்யூரிட்டிஸ் மார்க்கெட்டில் AI-ஐ பயன்படுத்துவது தொடர்பாக தனிப்பட்ட வழிகாட்டுதல்களை உருவாக்கத் தொடங்கியுள்ளது. இது டெக் நிறுவனங்களுக்கு மட்டுமல்லாது, நிதித் துறை சார்ந்த நிறுவனங்களுக்கும் கூடுதல் சவால்களை அளிக்கலாம்.
இந்த வரைவு அறிக்கை அதிகாரப்பூர்வமான இறுதி சட்டம் அல்ல என்றாலும், பிரைவேட் செக்டாரின் பொறுப்புகளை இது தெளிவாக வரையறுக்கும். அடுத்த சில மாதங்களில் கம்பெனிகள் தங்களின் தயாரிப்புகளை (Product development) எப்படி மாற்றியமைக்கின்றன மற்றும் இந்த விதிமுறைகளுக்கு எப்படி எதிர்வினை ஆற்றுகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
