2027-க்குள் AI தொழில்நுட்பப் பயன்பாட்டில் பெரும் மாற்றங்கள் வரப்போவதாக Gartner கணித்துள்ளது. இனி வரும் காலங்களில் passive பயன்பாட்டை விட, பாதுகாப்பு மற்றும் autonomous agent கட்டுப்பாடுகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். இந்த மாற்றம் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு கூடுதல் R&D முதலீடு மற்றும் புதிய வாய்ப்புகளை உருவாக்க உள்ளது.
மாறிவரும் AI உலகம்
கடந்த சில ஆண்டுகளாகவே AI தொழில்நுட்பத்தில் வேகமான சோதனைகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், 2027-ம் ஆண்டிற்குள் இந்த நிலை முற்றிலும் மாறப்போவதாக Gartner எச்சரிக்கிறது. இனி நிறுவனங்கள் AI-வை சும்மா பயன்படுத்தாமல், 'Active Architectural Control' எனப்படும் தீவிரக் கண்காணிப்புடன் செயல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இந்திய நிறுவனங்களுக்கு இது சவாலா அல்லது வாய்ப்பா?
TCS, Infosys, Wipro மற்றும் HCL Technologies போன்ற நிறுவனங்கள் உலகளாவிய பெருநிறுவனங்களின் டிஜிட்டல் கட்டமைப்பை நிர்வகிப்பவை. இப்போது இந்த நிறுவனங்கள் வெறும் மென்பொருள் உருவாக்கத்தோடு நிற்காமல், AI-க்கான சிக்கலான பாதுகாப்பு (Security) மற்றும் நிர்வாகத்தை (Governance) வழங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. 2028-க்குள் நிறுவனங்களில் நடக்கும் சைபர் தாக்குதல்களில் 25% பங்கு தன்னிச்சையாகச் செயல்படும் AI ஏஜென்டுகளால் (Autonomous Agents) ஏற்படலாம் என Gartner கணித்துள்ளது.
Sovereign Tech எனும் புதிய ட்ரெண்ட்
அமெரிக்காவைச் சாராத உலக நிறுவனங்கள், ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்ப நிறுவனத்தைச் சார்ந்திருப்பதைத் தவிர்க்க (Vendor Lock-in) திட்டமிட்டு வருகின்றன. இதற்காக 'Sovereign Technology' எனப்படும் தற்சார்பு தொழில்நுட்பக் கட்டமைப்பை நோக்கி அவை நகர்கின்றன. இதற்கேற்ப, நெகிழ்வான, எந்தவொரு நிறுவனத்தையும் சார்ந்திருக்காத (Vendor-agnostic) கட்டமைப்பை உருவாக்கித் தரும் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு உலகளவில் பெரிய சந்தை உருவாகும்.
R&D-ல் மாற்றங்கள்
தற்போது பயன்படுத்தப்படும் பொதுவான LLM மாடல்களை விட, துல்லியமான பணிகளுக்கு 'Large Quantitative Models' தேவைப்படுகிறது. இது தரவுகளை அலசி ஆராய்ந்து முன்கூட்டியே கணிக்க உதவும். இந்த புதிய மாடல்களை உருவாக்க இந்திய நிறுவனங்கள் தங்கள் R&D செலவினங்களை அதிகப்படுத்த வேண்டும்.
எதிர்கால டெக்: Wetware
சிலிக்கான் சார்ந்த கம்ப்யூட்டிங் அதன் ஆற்றல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், உயிரியல் சார்ந்த 'Wetware' அல்லது சிந்தெடிக் பயாலஜிக்கல் சிஸ்டம்கள் எதிர்காலத்தின் ஒரு முக்கிய அங்கமாகப் பார்க்கப்படுகின்றன. இது இன்னும் பரிசோதனை நிலையிலேயே இருந்தாலும், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய ஒரு நீண்டகால மாற்றமாகும்.
