Cloud சேவைகளுக்குப் பதிலாக Mac Mini மற்றும் Mac Studio-வை பயன்படுத்த Apple பரிந்துரைக்கிறது. AI-க்கான மாதாந்திர கட்டணங்களைத் தவிர்க்க, நிறுவனங்கள் இனி சொந்த ஹார்டுவேர் மூலம் பணிகளை மேற்கொள்ளலாம்.
கிளவுட் கட்டணங்களுக்கு முற்றுப்புள்ளி?
பொதுவாக நிறுவனங்கள் AI வேலைகளுக்காக Cloud சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு, பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும் (per-token fee) கட்டணம் செலுத்த வேண்டும். இது பெரிய நிறுவனங்களுக்கு நீண்ட கால அடிப்படையில் அதிக செலவை ஏற்படுத்தும். இதற்கு மாற்றாக, Apple தனது Mac Mini மற்றும் Mac Studio ஹார்டுவேர்களைப் பயன்படுத்தி, AI மாடல்களை நிறுவனத்திற்குள்ளேயே (on-premise) இயக்கும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மாற்றத்தின் மூலம், நிறுவனங்கள் தொடர் செலவுகளை (Operating Expense) தவிர்த்து, ஒரே நேரத்தில் செய்யும் முதலீடாக (Capital Expenditure) இதை மாற்றிக்கொள்ள முடியும்.
தொழில்நுட்ப பலம்
Apple-ன் சொந்த 'Silicon' சிப்கள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மெமரி மற்றும் கம்ப்யூட்டிங் யூனிட்களை ஒன்றாக இணைத்துள்ளதால், அதிகப்படியான AI வேலைகளை மிக வேகமாக செய்ய முடியும். மேலும், 'Thunderbolt' தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல Mac Studio-க்களை ஒன்றாக இணைப்பதன் மூலம், டேட்டா சென்டர்களுக்கு இணையான வேகத்தை நிறுவனங்களால் பெற முடியும்.
சந்தை சவால்
இந்தத் திட்டம் தொழில்நுட்ப ரீதியாக வலுவாக இருந்தாலும், சந்தையில் Apple-க்கு பெரிய சவால்கள் உள்ளன. தரவுகளின்படி, கார்ப்பரேட் டெஸ்க்டாப் சந்தையில் Apple வெறும் 4.6% பங்குகளை மட்டுமே வைத்துள்ளது. மாறாக, Microsoft Windows-ன் ஆதிக்கம் 91.3% ஆக உள்ளது. மேலும், Nvidia நிறுவனமும் டேட்டா சென்டர் சந்தையில் வலுவாக உள்ளது.
Microsoft தனது Windows மென்பொருளிலேயே AI அம்சங்களை கொண்டு வந்துள்ளதால், Apple-ன் இந்த ஹார்டுவேர் வியூகம் கார்ப்பரேட் நிறுவனங்களை எந்தளவுக்கு ஈர்க்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
