Generative AI வருகையால் Accenture-ன் பாரம்பரியமான கன்சல்டிங் பிசினஸ் மாடலில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மனித உழைப்பை நம்பியிருந்த பழைய முறைக்கு AI சவாலாக இருப்பதால், நிறுவனம் தனது செயல்பாடுகளை மாற்றியமைக்க போராடி வருகிறது.
பெரும் மாற்றம் தேவை
பல தசாப்தங்களாக, பெரிய அளவிலான ஊழியர்களைக் கொண்டு டெக் ப்ராஜெக்ட்களை முடித்துக்கொடுக்கும் 'கன்சல்டிங் பிரமிட' (Consulting Pyramid) முறையில்தான் Accenture இயங்கி வருகிறது. ஆனால், கோடிங் (Coding), டெஸ்டிங் மற்றும் டேட்டா அனாலிசிஸ் போன்ற பணிகளை AI கருவிகள் மிக வேகமாகச் செய்வதால், மனித உழைப்பின் தேவை குறையத் தொடங்கியுள்ளது.
முதலீட்டாளர்களின் கவலை
கிளையண்டுகள் AI-க்கு மாறுவதால், பில் செய்யக்கூடிய மணிநேரங்கள் (Billable Hours) குறைகின்றன. இதனால் வருவாய் குறைய வாய்ப்புள்ளது. சி.இ.ஓ Julie Sweet தலைமையில் நிறுவனம் சைபர் செக்யூரிட்டி மற்றும் AI பார்ட்னர்ஷிப்களில் முதலீடு செய்தாலும், சமீபத்திய நிதி முடிவுகள் மற்றும் புதிய புக்கிங்ஸ் (Bookings) மந்தமாக இருப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்ட நகர்வு
தற்போது, கிட்டத்தட்ட 8,00,000 ஊழியர்களுக்கு AI குறித்த பயிற்சியை அளித்து வருகிறது நிறுவனம். இதனுடன், AI-ஐ பயன்படுத்தாத ஊழியர்களைப் படிப்படியாகக் குறைக்கும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. பழைய மாடலையும் தக்கவைத்துக்கொண்டு, புதிய AI சேவைகளுக்கு மாறுவது என்பது ஒரு கத்தி மேல் நடக்கும் வித்தையாகவே பார்க்கப்படுகிறது.
வரும் காலாண்டுகளில் AI மூலம் கிடைக்கும் வருவாய் (AI-led revenue) எந்தளவு உயர்கிறது என்பதை வைத்தே நிறுவனத்தின் எதிர்காலம் தீர்மானிக்கப்படும்.
