ஸ்மார்ட்போன்களுக்கு அடுத்த கட்டமாக பார்க்கப்பட்ட AI Wearable சாதனங்கள், தற்போது பிரைவசி மற்றும் ரெகுலேட்டரி சிக்கல்களை சந்தித்து வருகின்றன. இந்த சவால்களை எதிர்கொள்ள டெக் நிறுவனங்கள் கேமரா இல்லாத வடிவமைப்புகளுக்கும், ஆன்-டிவைஸ் டேட்டா பிராசஸிங்கிற்கும் மாறத் தொடங்கியுள்ளன.
ஸ்மார்ட் கண்ணாடி முதல் ஹெட்செட்கள் வரை உலகம் முழுவதும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கப்பட்ட AI அணியக்கூடிய சாதனங்கள் (Wearable devices), தற்போது பெரும் தடையை சந்தித்துள்ளன. இந்த சாதனங்கள் மக்களின் தனிப்பட்ட உரிமைகளில் தலையிடுவதாக எழுந்த புகார்கள், இப்போது டெக் நிறுவனங்களை புதிய பாதையில் பயணிக்கத் தூண்டியுள்ளன.
பிரைவசி ஏன் இவ்வளவு பெரிய சிக்கல்?
கேமரா மற்றும் மைக்ரோஃபோன்களைக் கொண்டு உலகை கண்காணிக்கும் இந்த சாதனங்கள், பொது இடங்களில் பயன்படுத்தப்படும்போது பிரைவசி மீறலாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, Meta Platforms நிறுவனம் தனது ஸ்மார்ட் கண்ணாடிகள் மூலம் பயனர்களின் அனுமதி இன்றி டேட்டாவை AI டிரெய்னிங்கிற்குப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு, பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது போன்ற சிக்கல்கள், இந்த சாதனங்களின் மார்க்கெட் வளர்ச்சியை கட்டுப்படுத்துவதோடு, சட்ட ரீதியான சிக்கல்களையும் (Regulatory risks) உருவாக்கி வருகிறது.
மாறும் வியூகம்: Cloud-ல் இருந்து On-device-க்கு மாற்றம்
இந்த நம்பிக்கையின்மையை போக்க, நிறுவனங்கள் இப்போது Cloud-ல் தகவல்களைச் சேமிப்பதை தவிர்த்து, ஆன்-டிவைஸ் பிராசஸிங் (On-device processing) முறைக்கு மாறி வருகின்றன. அதாவது, உங்கள் டேட்டா அந்த சாதனத்திலேயே பாதுகாக்கப்படும். ஆனால், இந்த மாற்றத்திற்கு சாதனங்களின் பிராசஸிங் பவர் மற்றும் பேட்டரி திறன் 2X அளவுக்கு மேம்படுத்தப்பட வேண்டும். இது உற்பத்தி செலவை (Production cost) கணிசமாக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய வாய்ப்புகள் மற்றும் ஸ்டார்ட்அப்கள்
கேமரா இல்லாத ஆடியோ சார்ந்த சாதனங்களை உருவாக்கி, பிரைவசிக்கு முக்கியத்துவம் அளிக்கும் Even Realities, Plaud மற்றும் Pocket போன்ற நிறுவனங்கள் இப்போது முன்னிலை பெற்று வருகின்றன. இந்த நிறுவனங்கள், பிரைவசி என்பது வெறும் சட்ட விதிமுறை மட்டுமல்ல, இதுதான் எதிர்கால சந்தையின் அடிப்படை தேவை என்பதை உணர்ந்து செயல்படுகின்றன.
முதலீட்டாளர்களைப் பொறுத்தவரை, அடுத்த சில ஆண்டுகளில் இந்தத் துறை எப்படிப்பட்ட மாற்றங்களைச் சந்திக்கப் போகிறது என்பதை கவனிக்க வேண்டும். குறிப்பாக, நிறுவனங்கள் லாபத்தை மட்டுமே பார்க்காமல், பயனர்களின் நம்பிக்கையை எப்படித் தக்கவைக்கின்றன என்பதில்தான் இந்தத் துறையின் எதிர்காலம் அடங்கியுள்ளது.
