இன்ஃபோசிஸின் பிரம்மாண்டமான ₹18,000 கோடி பங்கு வாங்குதல் திட்டம் இன்று, நவம்பர் 26, 2025 அன்று நிறைவடைகிறது. இது, ரெக்கார்டு தேதியான நவம்பர் 14 அன்று பங்குகளை வைத்திருந்த தகுதியான பங்குதாரர்களுக்கு, தங்கள் பங்குகளை விற்க (tender) இதுவே கடைசி வாய்ப்பு. இந்த Buyback ஒரு பங்கிற்கு ₹1800 வழங்குகிறது, இது இன்ஃபோசிஸின் இதுவரை இல்லாத மிகப்பெரிய Buyback ஆகும். ஏற்கனவே 614% அதிகமாக சந்தா (subscription) வந்துள்ளது, இதில் சில்லறை (2:11) மற்றும் பொது முதலீட்டாளர்களுக்கு (17:706) குறிப்பிட்ட ஏற்பு விகிதங்கள் (acceptance ratios) உள்ளன.