சாதனை அளவிலான Q3 முடிவுகள் மற்றும் புதிய ஒப்பந்தங்கள்
இந்த அதிரடி கணிப்பிற்கு முக்கிய காரணம், Tech Mahindra நிறுவனம் வெளியிட்ட Q3FY26 முடிவுகள் தான். நிறுவனம் $1.1 பில்லியன் டாலர் அளவிலான புதிய ப்யூக்கிங்ஸ்களை (Bookings) பதிவு செய்துள்ளது. இது கடந்த பன்னிரண்டு மாதங்களில் (LTM) கிடைத்த டீல் வின்ஸ்களில் 48% வருடாந்திர வளர்ச்சியை குறிக்கிறது. மேலும், AI மாடர்னைசேஷன் போன்ற துறைகளில் வலுவான வாய்ப்புகள் தென்படுவதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
$500 மில்லியன் ஒப்பந்தம், FY27 இலக்குகள் உறுதி
இதோடு மட்டுமல்லாமல், ஐரோப்பாவை சேர்ந்த ஒரு பெரிய டெலிகாம் நிறுவனத்துடன் $500 மில்லியன் டாலருக்கும் அதிகமாக மதிப்புள்ள, ஐந்து வருட ஒப்பந்தம் கையெழுத்தானது ஒரு முக்கிய மைல்கல். இந்த நேர்மறையான சூழலில், Tech Mahindra தனது FY27 இலக்குகளை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. குறிப்பாக, தொழில்துறையில் முன்னணி வளர்ச்சியை அடைவதாகவும், 15% EBIT மார்ஜினை எட்டுவதாகவும் உறுதியளித்துள்ளது. தொடர்ச்சியான உற்பத்தித்திறன் மேம்பாடுகள் மற்றும் செலவு குறைப்பு திட்டங்கள் மூலம் இந்த லாப இலக்கை அடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.