Q4 FY26-ல், TCS-ன் வருவாய் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 1.2% வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால், முழு நிதியாண்டு 2026-ல் (FY26) வருவாய் 2.4% குறைந்துள்ளது. இது TCS வரலாற்றிலேயே முதல் முறையாகும். இந்திய ரூபாயில் பார்த்தால், ஆண்டு வளர்ச்சி 4.6% ஆக இருந்தாலும், டாலர் மதிப்பில் இந்த சரிவு currency depreciation-ன் தாக்கத்தைக் காட்டுகிறது.
வருவாய் சவால்களுக்கு மத்தியிலும், TCS சிறப்பான செயல்பாட்டுத் திறனை வெளிப்படுத்தியுள்ளது. இதன் Operating Margin, கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவு, FY26-ல் 25.0% ஆகவும், Q4-ல் 25.3% ஆகவும் உயர்ந்துள்ளது. செலவுக் கட்டுப்பாடு மற்றும் Productivity Gains, currency tailwinds போன்றவை இதற்கு முக்கிய காரணங்கள். இந்த நன்மைகள் நேரடியாக லாபத்தை உயர்த்துவதற்குப் பதிலாக, மறுமுதலீடு செய்யப்பட்டுள்ளன அல்லது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
நெட் ப்ராஃபிட் (Net Profit) பொறுத்தவரை, Q4 FY26-ல் 12.2% அதிகரித்து ₹13,718 கோடி ஆகவும், முழு ஆண்டுக்கு 1.35% அதிகரித்து ₹49,210 கோடி ஆகவும் பதிவாகியுள்ளது. இந்த வளர்ச்சி, வருவாய் அழுத்தங்களுக்கு மத்தியிலும் நிலையான Bottom Line-ஐ காட்டுகிறது.
TCS-ன் ஷேர் விலை, ஏப்ரல் 9, 2026 அன்று 1.16% உயர்ந்து ₹2,559.2 என்ற விலையில் வர்த்தகமானது. மேலும், வருடாந்திர AI வருவாய் $2.3 பில்லியன் ஐ தாண்டியுள்ளது, இது மெதுவான தேவை மற்றும் நீண்ட டீல் சைக்கிள்களுக்கு மத்தியில் ஒரு முக்கிய வளர்ச்சிப் பகுதியாக உள்ளது.