AI செலவினப் போரில் சந்தையின் வெவ்வேறு பார்வைகள்!
Big Tech நிறுவனங்களின் Q1 முடிவுகள், AI துறையில் அவை கொட்டித் தீர்க்கும் பணத்தைப் பற்றி முதலீட்டாளர்களுக்கு பலவிதமான பார்வைகளைக் காட்டியுள்ளன.
Meta Platforms: CEO Mark Zuckerberg தலைமையிலான Meta, இந்த காலாண்டில் 33% வளர்ச்சியுடன் $56.31 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது. ஆனால், 2026-க்கான மூலதனச் செலவு வழிகாட்டுதலை (Capex Guidance) $10 பில்லியன் அதிகரித்து, $125 பில்லியன் முதல் $145 பில்லியன் வரை செல்லக்கூடும் என அறிவித்துள்ளது. கணிடப் பவர் தேவைகள் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருப்பதே இதற்குக் காரணம் என CFO Susan Li தெரிவித்துள்ளார். AI தயாரிப்புகளை எப்படிப் பணமாக்குவது என்பதற்குத் தெளிவான திட்டம் இல்லாததை Mark Zuckerberg ஒப்புக்கொண்டார். இந்த நிச்சயமற்ற தன்மையால், Meta-வின் Share வர்த்தகத்திற்குப் பிந்தைய அமர்வுகளில் 7% வரை வீழ்ச்சியைக் கண்டது.
Alphabet-ன் கிளவுட் வளர்ச்சி: Google-ன் தாய் நிறுவனமான Alphabet, குறிப்பாக அதன் கிளவுட் பிரிவில் ஏற்பட்ட வலுவான வளர்ச்சியால், Share-கள் 7% வரை உயர்ந்தன. இந்த காலாண்டில் 22% வளர்ச்சியைப் பதிவு செய்து $109.9 பில்லியன் வருவாய் ஈட்டியுள்ளது. CEO Sundar Pichai, AI-யை ஒரு பெரிய பிளாட்ஃபார்ம் மாற்றமாக விவரித்து, Alphabet-ஐ முன்னணி AI உள்கட்டமைப்பு கட்டமைப்பாளராக நிலைநிறுத்துவோம் என்றார். 2026-ஆம் ஆண்டுக்கான மூலதனச் செலவை $180 பில்லியன் முதல் $190 பில்லியன் ஆகவும் உயர்த்தியுள்ளது.
Microsoft-ன் பணப்புழக்கம்: Microsoft, 16% வளர்ந்து $83 பில்லியன் விற்பனையையும், 23% உயர்ந்து $38 பில்லியன் லாபத்தையும் அறிவித்தது. எதிர்ப்பார்ப்புகளை மீறிய வருவாய் கிடைத்தாலும், அதன் இலவச பணப்புழக்கம் (Free Cash Flow) ஆண்டுக்கு $6 பில்லியன் குறைந்து $15.8 பில்லியன் ஆனது முதலீட்டாளர்களுக்கு ஒரு கவலையாக அமைந்தது. இருப்பினும், AI முதலீடுகள் லாபகரமானதாகச் சென்று கொண்டிருப்பதாகவும், AI-யால் ஆண்டுக்கு $37 பில்லியன் வருவாய் ஈட்ட முடியும் என்றும் CEO Satya Nadella நம்பிக்கை தெரிவித்தார்.
Amazon-ன் AI இன்ஜின்: Amazon Share-கள், குறிப்பாக அதன் கிளவுட் சேவையான AWS-ல் 28% வளர்ச்சி (கடந்த நான்கு ஆண்டுகளில் மிகச்சிறந்தது) கண்டதால், சுமார் 4% உயர்ந்தன. CEO Andy Jassy, AI சிப் வியாபாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் குறிப்பிட்டு, இது ஏற்கனவே $20 பில்லியன் வருவாய் ஈட்டும் திறனைக் கொண்டுள்ளதாகவும், இந்த ஆண்டு AI-க்காக சுமார் $200 பில்லியன் முதலீடு செய்யப்போவதாகவும் தெரிவித்தார்.
