₹1,500 கோடி வரி நோட்டீஸ் - Meesho விளக்கம் என்ன?
வருமான வரித்துறை, Meesho-வுக்கு கடந்த மதிப்பீட்டு ஆண்டான 2023-24-க்கான ₹1,499.73 கோடி வரி பாக்கி உள்ளதாக ஒரு 'Assessment Order' அனுப்பியுள்ளது. இது வட்டியையும் சேர்த்து கணக்கிடப்பட்ட தொகை. ஆனால், இந்த வரி கோரிக்கையைMeesho ஏற்கவில்லை. வரித்துறை கூறியுள்ள விஷயங்களில் உடன்பாடு இல்லை என்றும், இந்த வரி விதிப்பை எதிர்த்து சட்டப்படி போராட தங்களிடம் போதுமான காரணங்கள் இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது முதல் முறையல்ல, இதற்கு முன்னரும் 2022-23 மதிப்பீட்டு ஆண்டுக்கு ₹572 கோடி வரி கோரப்பட்டிருந்தது. அதற்கான தடை உத்தரவை கர்நாடகா உயர் நீதிமன்றம் வழங்கியுள்ளது. இப்படி தொடர்ச்சியாக பெரிய அளவிலான வரி கோரிக்கைகள் வருவது, நிறுவனத்தின் நிதி நிலைமை மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கையில் கேள்விகளை எழுப்புகிறது.
Lock-in expiry - ஷேர் விற்பனை அழுத்தம்?
வரி கோரிக்கை ஒருபுறம் இருக்க, இன்று (மார்ச் 9) சுமார் 109.9 மில்லியன் Meesho ஷேர்கள், அதாவது நிறுவனத்தின் மொத்த பங்குகளான 2% வர்த்தகத்திற்கு வர தகுதி பெற்றன. முந்தைய நாள் நிலவரப்படி இதன் மதிப்பு சுமார் ₹1,857.3 கோடி ஆகும். பெரிய அளவிலான பங்குகளுக்கான Lock-in period முடிவடைந்ததால், சந்தையில் உடனடியாக விற்பனை அழுத்தம் (Selling Pressure) அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எல்லா பங்குகளும் விற்கப்படாவிட்டாலும், சந்தையில் பங்கு அளிப்பு (Supply) கணிசமாக உயரும். இது வரி கோரிக்கையுடன் சேர்ந்து Meesho ஷேர் விலையை மேலும் அழுத்தியது. இதனால், ஷேர் விலை 10% சரிந்து ₹143.8 ஆகவும், அதன் 52 வார குறைந்தபட்ச விலையான ₹144.76-க்கும் கீழ் வர்த்தகமானது.
சந்தை பார்வை மற்றும் நிதி நிலை
இந்தியாவின் வளர்ந்து வரும் இ-காமர்ஸ் துறையில் Meesho ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் இணைய பயன்பாடு மற்றும் டிஜிட்டல் பேமெண்டுகள் அதிகரிப்பதால் இந்தத் துறை மேலும் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. Meesho, குறைந்த விலையில் கிடைக்கும் பொருட்களை விற்பனை செய்வதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளது. லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களையும், விற்பனையாளர்களையும் கொண்டுள்ளது. ஆனால், தற்போது நிறுவனம் பெரும் நஷ்டத்தில் இயங்குகிறது. கடந்த பன்னிரண்டு மாத வருவாய் விகிதத்தின்படி (Trailing Twelve Month P/E ratio), இது சுமார் -26.5x ஆக உள்ளது. இது, தற்போதைய வருவாய்க்கு முதலீட்டாளர்கள் அதிக விலை கொடுக்கத் தயாராக இல்லை என்பதைக் காட்டுகிறது. மேலும், Return on Equity (ROE) -388.66% ஆகவும், Return on Capital Employed (ROCE) -73.96% ஆகவும் எதிர்மறையாக உள்ளது. இது முதலீடுகள் திறமையாக பயன்படுத்தப்படவில்லை என்பதைக் குறிக்கிறது. போட்டியாளர்களான Amazon, Shopify போன்ற நிறுவனங்கள் நேர்மறையான P/E விகிதத்தில் வர்த்தகமாகின்றன. வருவாய் வளர்ச்சி 27% வரை இருக்கும் என கணிக்கப்பட்டாலும், லாபம் ஈட்டுவது ஒரு பெரிய சவாலாக உள்ளது. 2028 நிதியாண்டு வாக்கில் மட்டுமே லாபம் ஈட்டத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. BofA Securities நிறுவனம் 'Neutral' ரேட்டிங்குடன் ₹190 என்ற இலக்கு விலையை நிர்ணயித்துள்ளது.