CapEx நோக்கிய மாற்றம்: AI, டேட்டாவில் குவியும் முதலீடு
இந்த IT முதலீட்டு உயர்வுக்கு முக்கிய காரணம், Capital Expenditure (CapEx) நோக்கிய நிறுவனங்களின் மாற்றம். உலகளவில் 20-30% CapEx-க்கு ஒதுக்கும் நிலையில், இந்திய நிறுவனங்கள் தங்கள் டெக் பட்ஜெட்டில் 50-60% வரை CapEx-க்கு செலவிடுகின்றன. இதில், AI பிளாட்ஃபார்ம்கள் மற்றும் டேட்டா மாடர்னைசேஷனுக்கு 30%, கோர் அப்ளிகேஷன்களை மேம்படுத்த 25%, கிளவுட் மற்றும் IT இன்ஃப்ராஸ்ட்ரக்சருக்கு 25%, சைபர் செக்யூரிட்டிக்கு 20% என முதலீடு குவிகிறது.
பலன் குறைவதேன்? தலைவர்கள் பார்வையில் IT
இருப்பினும், பல நிறுவனங்கள் இந்த பெரிய முதலீடுகளை வைத்து எதிர்பார்த்த அளவுக்கு தொழில்முறை வளர்ச்சியை அடைய முடியாமல் தவிக்கின்றன. நிபுணர்களின் கருத்துப்படி, இதற்கு முக்கிய காரணங்கள் - வணிக இலக்குகளுக்கும் IT செயல்பாடுகளுக்கும் இடையே உள்ள இடைவெளி, பலவீனமான AI மற்றும் டேட்டா இன்ஃப்ராஸ்ட்ரக்சர், பழைய செயல்பாட்டு முறைகள் (Operating Models) போன்றவை.
மேலும், ஒரு வியக்கத்தக்க உண்மை என்னவென்றால், சுமார் 15% அளவிலான பிசினஸ் தலைவர்கள் மட்டுமே IT-யை ஒரு 'Strategic' துறையாக பார்க்கிறார்கள். பெரும்பான்மையான 70% பேர் இதை 'Good, but not great' என்றே மதிப்பிடுகின்றனர். அதாவது, IT-யை வெறும் செயல்பாட்டுக்கு உதவிகரமாக பார்க்கிறார்களே தவிர, வளர்ச்சிக்கான முக்கிய கருவியாக பார்ப்பதில்லை.
ஆபத்துகளும், எதிர்கால பார்வையும்
இந்த அதீத IT செலவினங்களில் ஆபத்துகளும் மறைந்துள்ளன. குறிப்பாக AI மற்றும் டேட்டா மாடர்னைசேஷன் மூலம் செயல்திறன் அல்லது வருவாய் உயராவிட்டால், இந்த பெரிய CapEx முதலீடுகள் வீணாக வாய்ப்புள்ளது. சிறப்பு AI திறமையாளர்கள் பற்றாக்குறை, பழைய சிஸ்டம்களுடன் புதிய தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதில் உள்ள சிக்கல்கள் போன்றவை இந்த இடைவெளியை மேலும் அதிகரிக்கும்.
வருங்காலத்தில், 40% IT பட்ஜெட் மாற்றங்களுக்கான திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. AI மற்றும் டேட்டா சார்ந்த மாற்றங்களில் இது முக்கிய பங்கு வகிக்கும். நிறுவனங்கள், டெக்னாலஜியை நிறுவுவதை மட்டும் பார்க்காமல், அளவிடக்கூடிய வணிகப் பலன்களை அடைவதில் கவனம் செலுத்த வேண்டும். அடுத்த இரண்டு முதல் மூன்று ஆண்டுகள், இந்த செலவினங்களுக்கும், அதன் உண்மையான மதிப்புக்கும் இடையே உள்ள இடைவெளியை இந்திய நிறுவனங்கள் சரிசெய்வதில் முக்கியமாக இருக்கும்.
