தற்போது இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் 'மெமரி சிப்' (Memory Chip) விலை ஏற்றம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், டிஸ்ட்ரிபியூட்டர்கள் (Distributors) அதிக பணப்புழக்க நெருக்கடியை சந்திக்கின்றனர். வருடாந்திர அடிப்படையில் அவர்களின் 'வொர்க்கிங் கேப்பிடல்' (Working Capital) தேவைகள் 25-30% வரை அதிகரித்துள்ளன. பழைய ஸ்டாக் வைத்திருக்கவும், விலை உயர்ந்த புதிய யூனிட்களை வாங்கவும் இது அவசியம். மேலும், ரீடெய்லர்கள் (Retailers) பணம் செலுத்த கால அவகாசம் கேட்பதால், பண வரவு மேலும் தாமதமாகிறது.
ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் (Brands) குறிப்பாக பிரபலமான மாடல்களின் விநியோகத்தை கணிசமாகக் குறைத்துள்ளன. மாதம்தோறும் டெலிவரிகள் 20-30% வரை குறைந்திருப்பதாக டிஸ்ட்ரிபியூட்டர்கள் கூறுகின்றனர். குறிப்பிட்ட மாடல்களுக்கு ரீடெய்லர்களின் தேவையை பூர்த்தி செய்வது கடினமாக உள்ளது. பாகங்கள் கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் மற்றும் மாறும் விலைகளால், பிராண்டுகள் குறிப்பிட்ட தேவைக்கு ஏற்ப சப்ளை செய்ய முடியாமல் தவிக்கின்றன.
இந்த நெருக்கடியான சூழலில், ஸ்மார்ட்போன் தயாரிப்பாளர்கள் டிஸ்ட்ரிபியூட்டர்களுக்கு கூடுதல் மார்ஜின் (Margin) சப்போர்ட்டோ அல்லது நிதி உதவியோ வழங்கவில்லை. விற்பனை இலக்குகள் குறைக்கப்பட் டாலும், உதிரிபாகங்கள் பற்றாக்குறை மற்றும் அதிக உற்பத்தி செலவு போன்ற பிரச்சனைகள் தொடர்கின்றன. இதனால், செயல்பாட்டு ரிஸ்க்கை (Operational Risk) டிஸ்ட்ரிபியூட்டர்களே சுமக்க வேண்டியுள்ளது. சில பிராண்டுகள் அடிப்படை போன்களின் மார்ஜினையும் குறைத்துள்ளன.
ஆனால், ஒரு சில ரீடெய்லர்கள் இதைப் பயன்படுத்தி லாபம் ஈட்டுகின்றனர். தங்களிடம் ஏற்கனவே இருந்த பழைய ஸ்டாக்குகளை, புதிய உயர்த்தப்பட்ட விலைக்கு விற்பனை செய்து லாபம் பார்க்கின்றனர். இது தற்காலிக லாபமாக இருந்தாலும், குறைவான விற்பனை அளவை ஈடுசெய்ய உதவுகிறது. இருப்பினும், கடுமையான போட்டி காரணமாக தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை வழங்க வேண்டிய கட்டாயத்திலும் உள்ளனர். மேலும், அதிக லாபம் தரும் ஹையர்-எண்ட் (Higher-end) மாடல்களை வாடிக்கையாளர்களிடம் தள்ளுகின்றனர்.
வாடிக்கையாளர்கள் பெரும் சிக்கலில் தவிக்கின்றனர். 30-40% விலை ஏற்றத்தை சமாளித்து இப்போதே வாங்குவதா அல்லது விலை குறையும் வரை காத்திருப்பதா எனத் தெரியாமல் உள்ளனர். குறிப்பாக அடிப்படை போன்களின் விலை உயர்வு, வாங்கும் பழக்கத்தை மாற்றி, ஒட்டுமொத்த விற்பனை வளர்ச்சியையும் பாதிக்கிறது.
