AI-க்கு மாறும் Coinbase
CEO பிரையன் ஆம்ஸ்ட்ராங் இது குறித்து கூறுகையில், 'தற்போதுள்ள AI டூல்ஸ்களைப் பயன்படுத்தி, முன்பு வாரக்கணக்கில் ஆன வேலைகளை இனி நாட்களிலேயே செய்து முடிக்க முடியும்' எனத் தெரிவித்துள்ளார். டெவலப்பர்கள் மட்டுமின்றி, தொழில்நுட்பம் சாராத குழுக்களும் இப்போது திறம்பட கோட் உருவாக்க முடிகிறது. இது கம்பெனியின் இன்ஜினியரிங் திறனை அதிகரித்து, வேகத்தை கணிசமாக உயர்த்தும்.
நிர்வாகத்தில் புதிய கட்டமைப்பு
இந்த புதிய, வேகமான கட்டமைப்பிற்காக, Coinbase ஒரு தட்டையான (flatter) நிர்வாக அமைப்பை adot செய்துள்ளது. நிர்வாக அடுக்குகளைக் குறைத்து, சிறிய, சுறுசுறுப்பான குழுக்களாக அணிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. தலைவர்கள் 'பிளேயர்-கோச்சஸ்' போல செயல்பட்டு, நிர்வாகப் பணிகளுடன் நேரடிப் பணியிலும் ஈடுபடுவார்கள். இது முடிவெடுக்கும் வேகத்தை அதிகரித்து, சந்தை மாற்றங்களுக்கு ஏற்ப விரைவாக செயல்பட உதவும்.
சந்தை சவால்களும் எதிர்காலமும்
தற்போதைய கிரிப்டோ மார்க்கெட் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும், நிறுவனத்தின் வேகத்தையும் செயல்திறனையும் மேம்படுத்த இந்த சீரமைப்பு அவசியம் என்று ஆம்ஸ்ட்ராங் வலியுறுத்தினார். செயல்பாட்டு மாற்றங்கள் மற்றும் கடினமான சந்தை இருந்தபோதிலும், கிரிப்டோவை பரவலாக ஏற்றுக்கொள்ளும் Coinbase-ன் நீண்டகால இலக்கு வலுவாக இருப்பதாக அவர் உறுதிப்படுத்தினார். பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு, அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு ஏற்ப விரிவான செவரன்ஸ் பேக்கேஜ்கள் (severance packages), சம்பள பாக்கி மற்றும் சுகாதார காப்பீட்டு உதவிகள் வழங்கப்படும்.
