லாபத்தை விட வாடிக்கையாளர் நம்பிக்கைதான் முக்கியம்!
CRED-ன் CEO Kunal Shah, 'நண்பர்களுக்கோ, குடும்பத்தினருக்கோ கொடுக்க தயங்காத ஒரு ப்ராடக்ட்டை மட்டுமே நாங்கள் உருவாக்குவோம்' என உறுதியாகக் கூறுகிறார். அவரது கூற்றுப்படி, வெளிப்படையான வெல்த் ப்ராடக்ட்கள் (Wealth Products) மூலம் வாடிக்கையாளர் நம்பிக்கையை பெறுவதுதான் CRED-ன் முக்கிய நோக்கம். இந்த அணுகுமுறை உடனடியாக லாபம் ஈட்ட உதவாது என்றாலும், இது நீண்டகால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கும் என அவர் நம்புகிறார்.
வருவாய் ஈட்டுவதில் சவால்கள் & RBI உரிமம்
நிதிச் சேவைகள் ஒரு முக்கிய வருவாய் ஆதாரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், merchant integrations வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது, தனி வருமான ஆதாரமாக அல்ல. இந்த சூழலில், ரிசர்வ் வங்கி (RBI) வழங்கியுள்ள Payment Aggregator license, CRED-ன் ஃபின்டெக் (Fintech) சேவைகளை மேலும் வலுப்படுத்துகிறது. இந்த உரிமம் merchant-களின் பரிவர்த்தனைகளை நேரடியாக கையாளவும், RBI மேற்பார்வையில் செயல்படவும் CRED-க்கு அதிகாரம் அளிக்கிறது. ஏற்கனவே payments, insurance, மற்றும் investment advisory போன்ற துறைகளில் உரிமங்களை வைத்திருக்கும் CRED, இந்த புதிய உரிமத்தின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விரிவான நிதிச் சேவைகளை வழங்கும் தனது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ளும்.
மாபெரும் பயனர் தளம் & முக்கிய தயாரிப்புகள்
FY2024-25 காலகட்டத்தில், CRED ₹8.5 லட்சம் கோடி-க்கும் அதிகமான பரிவர்த்தனைகளை கையாண்டுள்ளது. சுமார் 1.5 கோடி பயனர்களைச் சென்றடைந்துள்ளது. மேலும், இந்தியாவில் நடைபெறும் கிரெடிட் கார்டு பில் பேமெண்ட்களில் மூன்றில் ஒரு பங்கை CRED கையாள்கிறது. இந்த பிரம்மாண்டமான பயனர் தளம், நீண்டகால அடிப்படையில் நம்பிக்கையை வளர்த்து, சராசரி வருவாயை (ARPU) அதிகரிக்க வலுவான வாய்ப்பை வழங்குகிறது.
Kuvera, Surplus போன்ற CRED-ன் வெல்த் தயாரிப்புகள், வெளிப்படைத்தன்மை மற்றும் பணத்தை எளிதாக அணுகும் வசதிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. போர்ட்ஃபோலியோ செயல்திறனின் 'mirror view' என்பது நீண்டகால நம்பிக்கையை வளர்க்கும் ஒரு முக்கிய அம்சம். Surplus போன்ற ப்ராடக்ட்கள், அதீத வருவாய் ஈட்டும் பயனர்களுக்கு, சில மணி நேரங்களுக்குள் ₹4 லட்சம் வரை முதலீடுகளை எளிதாக அணுக உதவுகிறது. இது, வருமானம் ஈட்டுவதையும், அவசரத் தேவைகளுக்கு பணத்தை அணுகுவதையும் சமன் செய்கிறது.