சந்தை நிலவரம்
இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆரம்பத்தில் சற்று சரிந்தாலும், பிறகு மீண்டு வந்து ஏற்றத்துடன் முடிந்தது. நிஃப்டி கடந்த 7 வர்த்தக அமர்வுகளாக 23,300 மற்றும் 23,800 புள்ளிகளுக்கு இடையே ஒருRANGE-ல் வர்த்தகமாகி வருகிறது. இந்த லிமிட்டை உடைத்து மேலே சென்றால் சந்தை மேலும் உயர வாய்ப்புள்ளது. ஆனால் 23,300க்கு கீழே சென்றால் 23,100 முதல் 22,800 வரை சரியும் என்றும், 23,800க்கு மேலே சென்றால் 24,000 வரை செல்லக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பேங்க் நிஃப்டி எப்படி?
பேங்க் நிஃப்டி 52,800 என்ற முக்கியமான ஃபைபோனாச்சி ரீட்ரேஸ்மென்ட் லெவலை தொட்டுள்ளது. இது ஒரு திருப்புமுனையாக (Inflection Point) அமையலாம், மேலும் ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது. ஒருவேளை 52,800க்கு கீழே சரிந்தால், 51,550 வரை இறங்கலாம். ஆனால் 54,400க்கு மேல் சென்றால், மீண்டும் ஏற்றம் தொடங்கி 55,000 வரை செல்லக்கூடும்.
பங்குகள் பரிந்துரை:
360 One Wam
Teji Mandi Investment Technologies-ன் டெக்னிக்கல் ரிசர்ச் VP ஜடின் கெடியா, 360 One Wam பங்கை ₹1,107.40 விலையில் வாங்க பரிந்துரைக்கிறார். இதற்கான ஸ்டாப்-லாஸ் ₹1,070 ஆகவும், டார்கெட் விலை ₹1,175 ஆகவும் நிர்ணயித்துள்ளார். தினசரி சார்ட்டில் காணப்படும் சிமெட்ரிக்கல் ட்ரையாங்கிள் பேட்டர்ன், விரைவில் ஒரு பிரேக்அவுட் வர வாய்ப்பிருப்பதை காட்டுகிறது. MACD இண்டிகேட்டரில் பாசிட்டிவ் கிராஸ்ஓவர் ஏற்பட்டுள்ளதும் பை சிக்னலை வலுப்படுத்துகிறது.
IndusInd Bank
IndusInd Bank பங்கை ₹897.15 விலையில் வாங்கலாம். ஸ்டாப்-லாஸ் ₹870 மற்றும் டார்கெட் ₹968. இந்த வங்கிப் பங்கு, அதன் 200-நாள் மூவிங் ஆவரேஜ் (₹871) அருகே ஒரு ஹேமர் கேண்டில்ஸ்டிக் பேட்டர்னை உருவாக்கியுள்ளது. இது மீண்டும் ஏற்றம் தொடங்கலாம் என்பதற்கான அறிகுறி. RSI 50க்கு மேல் இருப்பது, வலுவான ஏற்றத்தை காட்டுகிறது.
Bajaj Finserv
Bajaj Finserv பங்கை ₹1,772 விலையில் வாங்க பரிந்துரைக்கிறார். ஸ்டாப்-லாஸ் ₹1,727 மற்றும் டார்கெட் ₹1,850. இன்ட்ரா-டே சார்ட்டில் இன்வெர்டட் ஹெட் அண்ட் ஷோல்டர்ஸ் பேட்டர்னில் இருந்து பிரேக்அவுட் ஆகியுள்ளது. இது குறுகிய கால ஏற்றத்தை குறிக்கிறது. Stochastics ஓவர்சோல்ட் பகுதியிலிருந்து வெளியேறுவதும் நேர்மறை நகர்வை உறுதிப்படுத்துகிறது.
