Home-services நிறுவனமான Snabbit, FY26-ல் **₹12.2 கோடி** வருவாய் ஈட்டியுள்ள நிலையில், **₹168 கோடி** நஷ்டத்தை பதிவு செய்துள்ளது. நிறுவனம் தனது விரிவாக்க பணிகளுக்காக இந்த நிதியை செலவிட்டுள்ளதாக CEO ஆயுஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
பெரும் நஷ்டம்.. ஏன் இந்த செலவு?
Snabbit நிறுவனம் இதுவரை $112 மில்லியன் முதலீட்டை திரட்டியுள்ளது. தற்போது சந்தையில் தனது இடத்தைப் பிடிப்பதற்காக அதிகப்படியான பணத்தை (Cash Burn) செலவழித்து வருகிறது. வருவாய்க்கும், செலவுக்கும் இடையே பெரிய இடைவெளி இருந்தாலும், இது சந்தையில் ஆதிக்கம் செலுத்த அவசியமான ஒன்று என நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
70 மடங்கு வளர்ச்சி
இந்த நிதி இழப்பை CEO ஆயுஷ் அகர்வால் நியாயப்படுத்தியுள்ளார். ஆண்டின் தொடக்கத்தில் 500 ஆக இருந்த தினசரி வேலைகளின் எண்ணிக்கை, ஆண்டு இறுதியில் 35,000 ஆக உயர்ந்துள்ளது. இது 70 மடங்கு அபரிமிதமான வளர்ச்சி. இதற்காக 20,000 ஊழியர்களை பணியமர்த்தி, 10 லட்சம் வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
யூனிட் எகனாமிக்ஸ் (Unit Economics) முக்கியத்துவம்
இந்த நஷ்டத்திலும் ஒரு பாசிட்டிவ் அம்சத்தை நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது. ஒவ்வொரு வேலையிலும் ஏற்படும் நஷ்டம், ஆண்டின் தொடக்கத்தில் ₹1,500-ஆக இருந்தது, தற்போது ₹200-க்கும் கீழ் குறைந்துள்ளது. Urban Company மற்றும் Pronto போன்ற முன்னணி நிறுவனங்களுடன் போட்டியிடும் Snabbit, இந்த நஷ்டத்தைக் குறைத்து லாபத்தை நோக்கி நகருமா என்பதுதான் முதலீட்டாளர்களின் முக்கிய கேள்வியாக உள்ளது.
முதலீட்டாளர்கள் கவனிக்கும் விஷயம் என்னவென்றால், நிறுவனத்தின் வருவாய் அதன் செலவுகளை விட வேகமான விகிதத்தில் உயர்கிறதா என்பதையும், வாடிக்கையாளர்களை தக்கவைக்கத் தொடர்ந்து சலுகைகள் தேவையா என்பதையும் அடுத்தடுத்த காலாண்டு முடிவுகளில் பார்க்க வேண்டும்.
