Tata Sons நிறுவனம் தனது 'upper-layer NBFC' அந்தஸ்தை நீக்கிக்கொள்ளும் நோக்கில், தனது இரண்டு துணை நிறுவனங்களை இணைக்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் RBI விதிகளின்படி கட்டாயமாக வர வேண்டிய IPO-வை தவிர்க்க முயல்கிறது. இந்த செய்தி வெளியானதால், Tata Chemicals மற்றும் Tata Investment Corporation பங்குகள் இன்று சரிவை சந்தித்தன.
டாடா சன்ஸ் நிறுவனம் தனது நிறுவன கட்டமைப்பில் ஒரு முக்கிய மாற்றத்தை முன்னெடுத்துள்ளது. பங்குச்சந்தையில் பட்டியலிடுவதைத் தவிர்க்கும் நோக்கில், Tata Electronics Systems மற்றும் Tata Consulting Engineers ஆகிய நிறுவனங்களை தன்னுடன் இணைக்க முன்மொழிந்துள்ளது. இதன் மூலம், தன்னை ஒரு முதலீட்டு நிறுவனத்திலிருந்து (Investment Vehicle) செயல்பாட்டு நிறுவனமாக (Operating Entity) மாற்றிக் காட்ட டாடா குழுமம் முயல்கிறது.
ஏன் இந்த நடவடிக்கை?
RBI-ன் 2022 விதிமுறைகளின்படி, 'upper-layer NBFC' என வகைப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் 3 ஆண்டுகளுக்குள் பங்குச்சந்தையில் கட்டாயம் பட்டியலிடப்பட வேண்டும். பல ஆண்டுகளாக டாடா சன்ஸ் ஐபிஓ-வை எதிர்பார்த்துக் காத்திருந்த முதலீட்டாளர்களுக்கு, தற்போது இது ஒரு பின்னடைவாக அமைந்துள்ளது. இந்த இணைப்பு நடந்தால், நிறுவனத்தின் வருவாயில் நிதிசார் வருமானம் குறைந்து, செயல்பாட்டு வருமானம் கூடும். இதன் மூலம், 'non-banking, non-financial company' என்ற அந்தஸ்தைப் பெற்று, பட்டியலிடும் கட்டாயத்திலிருந்து தப்பிக்க டாடா திட்டமிடுகிறது. இந்த மாற்றத்திற்குப் பிறகு நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் சுமார் ₹1.05 லட்சம் கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்கள் கவலை
இந்த திடீர் அறிவிப்பால், Tata Chemicals, Tata Motors Passenger Vehicles மற்றும் Tata Investment Corporation உள்ளிட்ட பங்குகளின் விலை 2.2% முதல் 3% வரை சரிந்தன. ஐபிஓ மூலம் லாபம் பார்க்கலாம் என எதிர்பார்த்த முதலீட்டாளர்களின் சென்டிமென்ட் தற்போது மாறியுள்ளது.
அடுத்து என்ன?
ஏற்கனவே இதேபோன்ற கோரிக்கையை RBI நிராகரித்திருந்த நிலையில், இந்த புதிய திட்டம் எந்தளவுக்கு வெற்றி பெறும் என்பது சந்தேகமே. இனி டாடா சன்ஸ் போர்டு மற்றும் RBI-ன் முடிவைப் பொறுத்தே நிறுவனத்தின் எதிர்காலம் அமையும்.
