SEBI-ன் புதிய 'Future Equivalent' (FutEq) முறை டெரிவேடிவ் டிரேடிங்கில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. ரிஸ்க் மேனேஜ்மென்ட்டிற்காக கொண்டுவரப்பட்ட இந்த கடுமையான விதிகள், தற்போது சாதாரண ஹெட்ஜிங் உத்திகளைக்கூட முடக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
இந்தியப் பங்குச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான SEBI, சந்தை அளவிலான பொசிஷன் லிமிட் (MWPL) மற்றும் F&O பேன் டிரிக்கர்களை கண்காணிக்கும் முறையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்துள்ளது. பழைய முறையில் ஒப்பந்தங்களின் எண்ணிக்கையை மட்டும் கணக்கிட்ட நிலையில், இப்போது 'Future Equivalent' (FutEq) எனப்படும் டெல்டா-அடிப்படையிலான சிக்கலான முறையைப் பின்பற்றி வருகிறது.
ஹெட்ஜிங்கில் உள்ள 'Sign-Flip' சிக்கல்
இந்த புதிய முறையின்படி, ஒரு டிரேடர் தனது 'ஸ்ட்ராடில்' (Straddle) அல்லது 'ஸ்ட்ராங்கிள்' (Strangle) பொசிஷன்களை மாற்றும்போது, அந்த பொசிஷனின் டெல்டா நிலை நேர்மறையிலிருந்து எதிர்மறைக்கு மாறினால் (Sign flip), அது விதிமீறலாகக் கருதப்படுகிறது. இதனால், ஒரு பகுதியையை மட்டும் க்ளோஸ் செய்ய நினைக்கும் டிரேடர்கள், ஒட்டுமொத்த பொசிஷனையும் ஒரே நேரத்தில் க்ளோஸ் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். இது குறைந்த வால்யூம் உள்ள நேரங்களில் டிரேடர்களுக்குப் பெரிய இழப்பை ஏற்படுத்தக்கூடும்.
மதியம் 2 மணி நேர இடைவெளி குழப்பம்
டிரேடர்கள் நாள் முழுவதும் டிரேடிங் செய்தாலும், விதிமீறல்கள் மதியம் 2 மணிக்கு தான் உறுதி செய்யப்படுகின்றன. காலையில் சரியாகத் தெரியும் ஒரு ட்ரேடு, 2 மணிக்கு வெளியாகும் அதிகாரப்பூர்வ டெல்டா கணக்கீட்டின்படி தவறுதலாக மாற வாய்ப்புள்ளது. ஒவ்வொரு புரோக்கரும் இந்த விதிகளைத் தங்கள் சொந்த Risk Management Systems (RMS) மூலம் வெவ்வேறாக விளக்குவதால், சந்தையில் சீரான தன்மை இல்லை.
தீர்வு என்ன?
இந்த சிக்கல்களைச் சரிசெய்ய, நிபுணர்கள் சில பரிந்துரைகளை வைத்துள்ளனர்:
- பூஜ்யத்தைச் சுற்றி ஒரு 'டெல்டா பேண்ட்' (Delta Band) உருவாக்கப்பட வேண்டும்.
- சிறிய தவறுகளுக்குத் திருத்திக்கொள்ள ஒரு 'கியூர் விண்டோ' (Cure Window) வழங்கப்பட வேண்டும்.
- ஏற்கனவே உள்ள பொசிஷன்களை க்ளோஸ் செய்யும் டிரேடுகளை விதிமீறல் பட்டியலில் சேர்க்கக்கூடாது.
இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டால் மட்டுமே, டிரேடர்கள் தடையின்றி ரிஸ்க் மேனேஜ்மென்ட் செய்ய முடியும் என்று சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
