WhatsApp-ல் வரும் போலியான Stock Tips மற்றும் முதலீட்டு ஆலோசனைகள் குறித்து முதலீட்டாளர்களுக்கு SEBI கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது. போலியான testimonals மற்றும் சர்வதேச எண்களைக் கொண்டு நடக்கும் இந்த மோசடிகளில் சிக்கி பணத்தை இழக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
শেர் மார்க்கெட்டில் முதலீடு செய்பவர்களை குறிவைத்து வாட்ஸ்அப் (WhatsApp) செயலியில் சமீபகாலமாக மோசடிகள் அதிகரித்துள்ளன. இதைத் தடுக்கும் விதமாக, இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியமான SEBI அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மோசடி எப்படி நடக்கிறது?
மோசடியில் ஈடுபடுபவர்கள் தங்களை மார்க்கெட் எக்ஸ்பர்ட்ஸ் (Market Experts) என்று கூறிக்கொண்டு, வாட்ஸ்அப் குழுக்களை உருவாக்கி முதலீட்டாளர்களை இணைக்கிறார்கள். வெளிநாட்டு எண்களைப் பயன்படுத்தி, லாபம் ஈட்டியது போன்ற போலியான ஸ்கிரீன்ஷாட்களைப் பகிர்ந்து, முதலீட்டாளர்களை நம்ப வைக்கிறார்கள். பிறகு, அங்கீகரிக்கப்படாத பிளாட்பார்ம்களில் பணத்தை முதலீடு செய்யவோ அல்லது ட்ரேடிங் அக்கவுண்ட் விவரங்களை பகிரவோ தூண்டுகிறார்கள். ஒரு குரூப் சிக்கிக்கொண்டால், அடுத்த சில நாட்களில் அதே நபர்கள் புதிய பெயரில் வேறு குழுவைத் தொடங்கி விடுகிறார்கள்.
நீங்கள் கவனமாக இருக்க வேண்டியவை
எந்தவொரு நபரிடமும் ஆலோசனைகளை பெறுவதற்கு முன்னால், அவர்கள் SEBI-யால் அங்கீகரிக்கப்பட்டவர்களா என்பதைச் சரிபார்ப்பது மிகவும் முக்கியம். இது தொடர்பான விவரங்களை SEBI-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் எளிதாகத் தேடிப் பார்க்கலாம். பட்டியலில் பெயர் இல்லை என்றால், அவர்கள் சட்டப்பூர்வமாக உங்களுக்கு ஆலோசனைகளை வழங்க முடியாது.
- உறுதிமொழி வேண்டாம்: 'நிச்சயம் இவ்வளவு லாபம் கிடைக்கும்' அல்லது 'Fixed Return' என்று யாராவது சொன்னால், அது நிச்சயம் மோசடியாகத்தான் இருக்கும்.
- பரிமாற்றங்கள்: தனிப்பட்ட நபர்களின் வங்கி கணக்குகளுக்குப் பணத்தை அனுப்ப வேண்டாம்.
- உணர்ச்சிகரமான முதலீடு: யாருடைய தூண்டுதலுக்கும் ஆளாகாமல், சொந்தமாக ஆய்வு செய்து முதலீடு செய்வதே நீண்ட கால அடிப்படையில் பாதுகாப்பானது.
உங்கள் முதலீட்டு பாதுகாப்பு உங்கள் கையில்! ஏதேனும் சந்தேகமான லிங்க் அல்லது குரூப் வந்தால் உடனடியாக ரிப்போர்ட் செய்யவும்.
