SEBI தனது Document Number Verification System-ஐ அதிரடியாக அப்டேட் செய்துள்ளது. இனிமேல் அதிகாரப்பூர்வ நோட்டீஸ்களை சரிபார்க்க 'Subject Line' கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது மோசடி நபர்களிடமிருந்து முதலீட்டாளர்களைப் பாதுகாக்க உதவும்.
அக்டோபர் 1, 2026 முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய முறையின்படி, SEBI-யிடம் இருந்து வரும் ஒரு கடிதம் உண்மையானதா என்பதை சரிபார்க்க, இனி அந்த கடிதத்தின் 'Subject Matter'-ஐயும் உள்ளீடு செய்ய வேண்டும். இது மோசடி நபர்கள் போலி கடிதங்களை உருவாக்கி, முதலீட்டாளர்களை மிரட்டும் அல்லது தனிப்பட்ட தகவல்களைத் திருடும் முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.
சிஸ்டத்தின் புதிய வசதிகள்:
இந்த அப்டேட் SEBI-யின் E-Office மாட்யூலுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. இதனால், வெளியாகும் ஒவ்வொரு கடிதத்தின் நம்பகத்தன்மையையும் எளிதாக டிரா செய்ய முடியும்.
முதலீட்டாளர்கள் கவனத்திற்கு:
இந்த வெரிஃபிகேஷன் போர்டல் என்பது, அந்தக் கடிதம் SEBI-யால் வழங்கப்பட்டதா என்பதை மட்டுமே உறுதிப்படுத்தும். ஆனால், கடிதத்தில் உள்ள சட்டப்பூர்வ கோரிக்கைகள் அல்லது தகவல்களின் உண்மைத்தன்மையை இது உறுதிப்படுத்தாது. எனவே, எவ்வளவு பெரிய ஆவணமானாலும், அதில் உள்ள தகவல்களைச் சரிபார்க்க முறையான டூ-டிலிஜென்ஸ் (Due Diligence) செய்வது அவசியம்.
செப்டம்பர் 2026-க்கு முந்தைய கடிதங்களைச் சரிபார்க்க, சந்தேகங்கள் இருந்தால் dnvs@sebi.gov.in என்ற அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு SEBI அறிவுறுத்தியுள்ளது.
